Share Market Today:பங்குச்சந்தையில் ரணகளம்!2 நாட்களில் முதலீட்டாளர்களின் ரூ.12 லட்சம் கோடி அம்போ!காரணம் என்ன?

By Pothy RajFirst Published Jan 27, 2023, 3:38 PM IST
Highlights

இந்தியப் பங்குச்சந்தைகளில் கடந்த புதன்கிழமையும் இன்றும் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.12லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியப் பங்குச்சந்தைகளில் கடந்த புதன்கிழமையும் இன்றும் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.12லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த மோசடிகள், தில்லுமுல்லு, கணக்கு மோசடிகள் குறித்து அமெரிக்காவின் ஹிண்டர்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்கு பின்  பங்குசந்தையில் சரிவு படுமோசமாக இருந்தது.

அதிலும் ஹிண்டர்பர்க் அறிக்கைக்குப்பின் பங்குச்சந்தையில் 85 சதவீதப் பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. குறிப்பாக அதானி குழுமத்துக்கு வங்கிகள் அளித்துள்ள கடன் குறித்து ஹிண்டன்பர்க் அறிக்கையால், வங்கிப் பங்குகளும் படுவீழ்ச்சி அடைந்தன.

அதானி குழுமத்துக்கு எதிராக களமிறங்கிய காங்கிரஸ்! ஹிண்டன்பர்க் அறிக்கை பற்றி SEBI,RBI விசாரணை தேவை

கடந்த 2 நாட்களில் மட்டும் மும்பை பங்குச்சந்தையில் இதுவரை 1,117 புள்ளிகள் அதாவது 2 சதவீதம் சரிந்துள்ளது. இன்று வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் குறைந்தபட்சமாக 59,008 புள்ளிகள் வரைகுறைந்தது. இரு நாட்களில் தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 17,600 புள்ளிகளாகக் குறைந்து, 2021, அக்டோபரில் இருந்தநிலைக்கு வந்துவிட்டது. மும்பை பங்குச்சந்தையில் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளும் 4 சதவீதம் சரிந்தன.

கடந்த 2 நாட்களில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட ரத்தக்களறியால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.12 லட்சம் கோடி குறைந்துள்ளது. இதில் பெரும்பங்கு அதானி குழுமத்துக்கு விழுந்த அடி பெரும்பாலான பங்குகளைப் பாதித்துள்ளது. 

இந்த சரிவுக்கு முக்கியமான காரணங்கள் உள்ளன.

வழக்குத் தொடுக்கும் அதானி குழுமம்:அமெரிக்க ஹிண்டன்பர்க் நிறுவனம் பதில் என்ன?

முதலாவது, அதானி குழும பங்குகளின் சரிவு

கடந்த இரு நாட்களில் அதானி குழுமத்துக்குஏ ற்பட்ட நஷ்டத்தால் முதலீட்டாளர்களின் 4500 கோடி டாலர் இழப்பை சந்தித்தது. அதானி குழுமத்தின் அதானி என்டர்பிரைசஸ், அதானி வில்மர், அதானி கிரீன், அதானி டோட்டல் கேஸ், அம்புஜா சிமென்ட்ஸ், அதானி போர்ட்ஸ், ஆகிய பங்குகள் மதிப்பு 5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன.

ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின் எதிரொலியால் அடுத்துவரும் வர்த்தக நாட்களும் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் அழுத்தத்தைச் சந்திக்கும் இது ஆழ்ந்த கவலையை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தும் என்று சந்தை வல்லுநர்கள் எச்சரி்க்கிறார்கள்.

வங்கிப் பங்குகள்

அதானி குழுமத்தின் பங்குகள் சரிவு, வங்கிப் பங்குகளிலும், நதிச்சேவைப் பங்குகளிலும் எதிரொலித்தது. ஏனென்றால், அதானி நிறுவனங்களுக்கு வங்கிகள் அதிக அளவில் கடன் கொடுத்துள்ளன. அதானி குழுமம் பெற்ற கடனில் 40 சதவீதம் எஸ்பிஐ வங்கி அளித்துள்ளது. தனியார் வங்கிகள் கடன் வழங்கியதைவிட இரு மடங்கு அரசு வங்கிகள் கடன் வழங்கியுள்ளன. இதனால் வங்கிப்பங்குகளும் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன. நிப்டியில் வங்கி குறியீடு 2 நாட்களில் 7 சதவீதம் சரி்ந்துள்ளது.

பாதாளத்தில் பங்குச்சந்தை!கடும் சரிவில் சென்செக்ஸ்,நிப்டி:அதானி பங்குகள் 17% வீழ்ச்சி

தொழில்நுட்ப காரணங்கள்

50 நிறுவனப் பங்குகளைக் கொண்ட நிப்டி இன்று குறைந்தபட்சமாக 17,695 புள்ளிகள் வரை சரிந்தது. இது 17,289 புள்ளிகள்வரை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய 200 நாட்களில் பெற்ற உயர்வை அடுத்துவரும் நாட்களில் இழக்க உள்ளது. 

click me!