அதானி குழுமத்துக்கு எதிராக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை குறித்து பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி மற்றும் ரிசர்வ் வங்கி விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ்கட்சி வலியுறுத்தியுள்ளது
அதானி குழுமத்துக்கு எதிராக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை குறித்து பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி மற்றும் ரிசர்வ் வங்கி விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ்கட்சி வலியுறுத்தியுள்ளது
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிடன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளாக அதானி குழுமம் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது அந்த அறிக்கையில் “ அதானி குழுமம் பங்குசந்தையில் ஏராளமான மோசடி வேலைகள் செய்துள்ளது, மோசடி செய்துள்ளது
கடந்த 2 ஆண்டுகளாக அதானி குழுமம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினோம். அதில், ரூ.17.80 லட்சம் கோடி மதிப்பிலான தொகைக்கு அதானி குழுமம் பங்குச்சந்தையில் மோசடி செய்து, பங்குகளை திருத்தியுள்ளது தெரியவந்துள்ளது”
'உங்கள் தாயை கவனியுங்கள்! நேர மேலாண்மை புரியும்'! மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
இந்த அறிக்கை வெளியானதையடுத்து, அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு ரூ.50ஆயிரம் கோடி சரிந்துள்ளது. அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம்மீது வழக்குத் தொடரப்போவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. அதானி குழுமம் வழக்குத் தொடர்ந்து அந்நிறுவனத்தை அமெரிக்க நீதிமன்றத்துக்கு இழுப்போம் என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்து, ரிசர்வ் வங்கி, செபி அமைப்பு விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
மத்தியில் ஆளும் அரசுக்கும், அதானி குழுமத்துக்கும் இருக்கும் நெருங்கிய உறவு குறித்து நாங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். ஆனால், பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி, அதானி குழுமம் செய்துள்ள முறைகேடுகளை வெளியிட்டுள்ள ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்தும், அதானி நிறுவனத்தின் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி, ரிசர்வ் வங்கி விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பிபிசி-யின் பிரதமர் மோடி ஆவணப்படம் ஒளிபரப்பு:ஏபிவிபி பதிலடி
பங்குகளை அப்பட்டமாக தங்களுக்குச் சாதகமாக மாற்றி, மோசடியில் அதானி குழுமம் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் குற்றம்சாட்டுகிறது. 2 ஆண்டுகள் ஆய்வில், அதானி குழுமம் பங்கு மோசடி, கணக்கு மோசடி மூலம் ரூ.17.80 லட்சம் கோடி ஈட்டியுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளது.
மோடி அரசு தணிக்கையை விதிக்க முயற்சி செய்யலாம், ஆனால் இந்திய வணிகங்கள் மற்றும் நிதிச் சந்தைகளின் உலகமயமாக்கல் சகாப்தத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் தவறான நிர்வாகத்தை மையமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் அறிக்கைகளை வெறுமனே ஒதுக்கித் தள்ளிவிட்டு மோசமான அறிக்கை என்று என நிராகரிக்க முடியுமா?
1991ம் ஆண்டு பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பிறகு இந்தியாவின் நிதிச் சந்தைகளின் பரிணாமம் மற்றும் நவீனமயமாக்கல் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு சம நிலையை ஏற்படுத்துவதையும் நோக்கமாக வைத்துள்ளது.
குற்றவாளிகள், தீவிரவாதிகள் ,பணமோசடி செய்வதைத் தடுக்கவும், வர ஏய்ப்பைக் குறைக்கவும், நிதி வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க முயன்றது.
வழக்குத் தொடுக்கும் அதானி குழுமம்:அமெரிக்க ஹிண்டன்பர்க் நிறுவனம் பதில் என்ன?
கறுப்புப் பண ஒழிப்பு பற்றி பேசும் மோடி அரசு, தனக்கு நெருக்கமான நிறுவனத்தின் சட்டவிரோதச் செயல்களைப் பார்த்துக் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறதா? செபி இந்த குற்றச்சாட்டுகளை பெயரளவில் மட்டும் விசாரிக்காமல் முழுமையாக விசாரிக்குமா?
அதானி குழு நிர்வாகத்தின் கீழ் உள்ள எல்ஐசியின் பங்குச் சொத்துக்களில் 8 சதவிகிதம், அதாவது ரூ.74,000 கோடி உள்ளது. தனியார் வங்கிகளைவிட , அரசு வங்கிகளும் அதானி குழுமத்துக்கு 2 மடங்கு கடன் வழங்கியுள்ளன. அதானி குழுமத்தின் கடனில் 40 சதவீதம் எஸ்பிஐ வங்கி வழங்கியுள்ளது.
எல்ஐசி மற்றும் எஸ்பி வங்கியில் தங்கள் சேமிப்பு பணத்தை வைத்துள்ள கோடிக்கணக்கான இந்தியர்களை இவர்களின் பொறுப்பின்மை மிகப்பெரிய நிதி ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. அதானி குழுமம் தனது பங்குகளின் மதிப்பை செயற்கையாக உயர்த்தி, பின்னர் அந்த பங்குகளை அடகு வைத்து நிதி திரட்டியிருப்பது
உண்மையாக இருந்தால், அந்த பங்குகளின் விலையில் சரிவு ஏற்பட்டால், எஸ்பிஐ வங்கி உள்ளிட்ட கடன் கொடுத்த வங்கிகள் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும்.நிதி நிலைத்தன்மை ஆபத்துகல் இருக்கிறதா என்பதை குறித்து விசாரிப்பதையும், கட்டுப்படுத்துவதையும் ரிசர்வ் வங்கி உறுதி செய்யுமா?
பொதுவாக ஒரு அரசியல் கட்சி ஒரு தனிநபர் நிறுவனம் அல்லது நிறுவனக் குழு பற்றிய ஆய்வு அறிக்கைக்கு எதிர்வினையாற்றக்கூடாது, ஆனால் அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பர்க் தடயவியல் பகுப்பாய்வு குறித்துதான் காங்கிரஸ் கட்சியின் பதில் கோருகிறது.
ஏனெனில், அதானி குழுமம் ஒரு சாதாரண கூட்டு நிறுவனமல்ல: பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் முதல்வராக இருந்த காலத்திலிருந்தே அவருடன் நெருக்கமாக இருந்தது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது