Today Share Market Live: சரிவுடன் தொடங்கியது பங்குச்சந்தை: நிப்டி, சென்செக்ஸ் வீழ்ச்சி: ஜோமேட்டோவுக்கு அடி

By Pothy RajFirst Published Jan 3, 2023, 9:41 AM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. ஜோமேட்டோ பங்குகள் விலை மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளன.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. ஜோமேட்டோ பங்குகள் விலை மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளன.

அமெரிக்காவில் நிலவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் ரிசர்வ்  வட்டிவீதத்தை உயர்த்தும் என்பது உறுதியாகியுள்ளது. இது தவிர ஐஎம்எப் தலைவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்தநிலையை 2023ம் ஆண்டு சந்திக்கலாம் என்று கூறியுள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையிழக்கச் செய்துள்ளது.

2023ம் ஆண்டின் முதல் நாளே பங்குச்சந்தையில் உற்சாகம்! சென்செக்ஸ்,நிப்டி புள்ளிகள் ஜோர்!

அமெரிக்கப் பங்குச்சந்தை நேற்று விடுமுறை என்பதால், அங்கு அடுத்து என்ன நிலவரம் என்பதை தெரியாமல் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆசியப் பங்குசந்தையும் ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இதனால் முதலீட்டில் ஆர்வம் செலுத்தாமல் கவனத்துடன் வர்த்தகத்தை காலை முதல் கையாள்கிறார்கள். இதனால் வர்த்தகம் தொடங்கும் முன்பே பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டது.

16 மாதங்களில் இல்லாதது! டிசம்பரில் வேலையின்மை 8.30 சதவீதமாக அதிகரிப்பு: சிஎம்ஐஇ தகவல்

காலையில் வர்த்தகம்தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 80 புள்ளிகள் சரிந்து, 61,087 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 21 புள்ளிகள் குறைந்து, 18,176 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நடத்தி வருகின்றன.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களின் பங்குகளில் 10 நிறுவனங்களின் பங்குகள் மட்டும் லாபத்தில் செல்கின்றன, மற்ற நிறுவனப் பங்குகள் சரிவில் உள்ளன.

ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், கோடக்மகிந்திரா, பவர்கிரிட், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட் பங்குகள் லாபத்தில் உள்ளன.

நிப்டியில், எஸ்பிஐ காப்பீடு, சன்பார்மா, ரிலையன்ஸ் இன்சூரன்ஸ், பிரிட்டானியா, ஹெச்யுஎல்   பங்குகள் அதிக சரிவைச்சந்தித்தன. டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி, கோடக் மகிந்திரா, எஸ்பிஐ பங்கு விலை உயர்ந்துள்ளன.

எகிறியது தங்கம் விலை ! மிடில் கிளாஸ் மக்களுக்கு அதிர்ச்சி! இன்றைய(2/01/2023) நிலவரம்

ஜோமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியான குஞ்சன் பட்டிதார் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, ஜோமேட்டோ பங்கு மதிப்பு 2 சதவீதம் சரிந்துள்ளன.

நிப்டியில் பொதுதத்துறை வங்கிப்பங்குள், தனியார் வங்கித்துறை பங்குகள் மட்டுமே லாபத்தில் உள்ளன. மற்றவகையில் ஊடகம், உலோகம், மருந்துத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை ஆகிய பங்குகள் சரிவில் உள்ளன.

click me!