
2023ம் ஆண்டின் முதல் நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையும், தேசியப் பங்குச்சந்தையும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்தன.
உள்நாட்டு முதலீட்டாளர்கள் புத்தாண்டின் முதல் வர்த்தகத்தை உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். டிசம்பர் மாத பிஎம்ஐ குறியீடு 57 ஆக உயர்ந்திருப்பது, நிறுவனங்களில் புதியஆர்டர்கள் வரத் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
16 மாதங்களில் இல்லாதது! டிசம்பரில் வேலையின்மை 8.30 சதவீதமாக அதிகரிப்பு: சிஎம்ஐஇ தகவல்
சீனாவில் இருந்து ஏற்றுமதியாகும் அலுமினியத்துக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது இந்தியாவுக்கு சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதிகஅளவில் உலோகப் பங்குகளை வாங்கினர்.
காலையில் ஊசலாட்டத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை அதன்பின் ஏற்றத்தோடு சென்றது. ஆண்டின் முதல் வர்த்தகதினத்திலேயே பங்குச்சந்தை உயர்த்திருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்பாரா? பணமதிப்பிழப்பு தீர்ப்பு பற்றி பாஜக கருத்து
மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குசந்தையில் சென்செக்ஸ் 327 புள்ளிகள் உயர்வுடன் 61,167 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 92 புள்ளிகள் உயர்ந்து, 18,197 புள்ளிகளிலும் வர்த்தகத்தை முடித்தது.
மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களில், 7 நிறுவனப் பங்குகள் இழப்பைச்சந்தித்தன, மற்ற நிறுவனப் பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன. இந்துஸ்தான் லீவர், நெஸ்ட்லே இந்தியா, சன்பார்மா, டெக் மகிந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் சரிந்தன.
நிப்டியில் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஹின்டால்கோ, ஓன்ஜிசி, இன்டஸ்இன்டஸ் வங்கிப் பங்குகள் லாபத்தில் முடிந்தன. டைட்டன், டிவிஸ் லேப்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயின்ட்ஸ், ஹீரோ மோட்டார் பங்குகள் விலை குறைந்தன. நிப்டியில் உலோகத்துறை பங்குகள் 3 சதவீதம் உயர்ந்தன, ரியல்எஸ்டேட் பங்குகள் ஒரு சதவீதம் உயர்ந்தன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.