கடந்த 16 மாதங்களில் இல்லாத வகையில், 2022 டிசம்பரில் நாட்டில் வேலையின்மை அளவு 8.30 சதவீதமாக அதிகரித்துள்ளது என இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) தெரிவித்துள்ளது.
கடந்த 16 மாதங்களில் இல்லாத வகையில், 2022 டிசம்பரில் நாட்டில் வேலையின்மை அளவு 8.30 சதவீதமாக அதிகரித்துள்ளது என இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) தெரிவித்துள்ளது.
நவம்பரில் வேலையின்மை அளவு 8 சதவீதமாகத்தான் இருந்தது. ஆனால், டிசம்பரில் 8.30 சதவீதமாக அதிகரித்துள்ளது. டிசம்பரில் நகர்ப்புறங்களில் வேலையின்மை வீதம் 10.09 சதவீதமாக இருக்கும்போது, நவம்பரில் இது 8.96 சதவீதமாகக் குறைந்திருந்தது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பு
கிராமப்புறங்களில் வேலையின்மை டிசம்பரில் 7.44 சதவீதமாகக் குறைந்துவிட்டது, நவம்பரில் 7.55 சதவீதமாக இருந்தது.
சிஎம்ஐஇ மேலாண் இயக்குநர் மகேஷ் வியாஸ் கூறுகையில் “ வேலையின்மை அதிகரிப்பு பெரிதாக பாதிப்பு ஏதும் இல்லை, ஏனென்றால், தொழிலாளர்கள் பங்களிப்பு வீதமும் வேலையின்மை அதிகரித்த அதே அளவு உயர்ந்து 40.48 சதவீதமாகடிசம்பரில் அதிகரித்துள்ளது. இது கடந்த 12 மாதங்களில் இல்லாத அதிகமாகும்” எனத் தெரிவித்தார்
அக்டோபரில் வேலையின்மை வீதம் 7.77 சதவீதமும், செப்டம்பரில் 6.43 சதவீதமும் என குறைந்திருந்தது. மாநிலவாரியாகக் கணக்கெடுப்பில், ஹரியானாவில் வேலையின்மை 37.4 சதவீதமாக அதிகரித்துள்ளது, அதைத் தொடர்ந்து ராஜஸ்தானில் 28.5 சதவீதமும், டெல்லியில் 20.8 சதவீதமும், பீகாரில் 19.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
மத்திய அரசின் புத்தாண்டுப் பரிசு! மாதம் 5 கிலோ உணவு தானியங்கள்!
ஒடிசாவில் வேலையின்மை மிகக்குறைவாக 0.9சதவீதமாகவும், அதைத்தொடர்ந்து குஜராத்தில் 2.3 சதவீதமாகவும், கர்நாடகத்தில் 2.5 %, மேகாலயாவில் 2.7%, மகாராஷ்டிராவில் 3.1 சதவீதமாக இருக்கிறது
தேசிய புள்ளியியல் அலுவலகம் நவம்பரில் வெளியிட்ட தகவலின்படி, ஜூலை- செப்டம்பர் காலாண்டில் நாட்டில் வேலையின்மை வீதம் 7.2 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இது ஜூன் மாதம் முடிந்த முதல் காலாம்டில் 7.6 சதவீதமாக இருந்தது எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.