ரத்தன் டாடாவின் நெருங்கிய விஸ்வாசியும், 60 ஆண்டுகளாக டாடா நிறுவனத்தோடு தொடர்பில் இருந்தவரான ஆர்.கே. கிருஷ்ணகுமார் நேற்று மாலை காலமானார்.அவருக்கு வயது 84.
ரத்தன் டாடாவின் நெருங்கிய விஸ்வாசியும், 60 ஆண்டுகளாக டாடா நிறுவனத்தோடு தொடர்பில் இருந்தவரான ஆர்.கே. கிருஷ்ணகுமார் நேற்று மாலை காலமானார்.அவருக்கு வயது 84.
டாடா குழுமத்தில் கேகே என்று அழைக்கப்படுபவர் கிருஷ்ணகுமார். கேகே என்றால் டாடா குழுமத்தில், நிறுவனங்களில் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. டாடாவோடு நேரடியாக உரையாடும், ஆலோசிக்கும் நெருக்கத்தையும், விஸ்வாசத்தையும் கிருஷ்ணகுமார் பெற்றிருந்தார்.
கேகே.கிருஷ்ணகுமார் நேற்றுமும்பையில் உள்ள அவரின் வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவர் வரவழைக்கப்பட்டால், ஆனால், அவர் வருவதற்கு முன்பே கிருஷ்ணகுமார் உயிரிழந்தார். கிருஷ்ணகுமாருக்கு மனைவி ரத்னா, மகன் அஜித், பேரன் ஆர்யா ஆகியோர் உள்ளனர்.
டாடா நுகர்வோர் பொருட்கள் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக அஜித் பணியாற்றி வருகிறார். கிருஷ்ணகுமார் மறைவுச் செய்தி உடனடியாக அந்தமான் நிகோபர் தீவுகளில் இருக்கும் அஜித் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது.
டாடா குழுமத்தோடு ஏறக்குறைய 60 ஆண்டுகளாக தொடர்பில் இருந்தவர் கிருஷ்ணகுமார். கடந்த 1963ம் ஆண்டு சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் படித்து முடித்த கிருஷ்ணகுமார், டாடா குழுமத்தில் சேர்ந்தார். டாடா குழுமத்தில் நுகர்வோர் பொருட்கள் பிரிவு, ஹோட்டல்கள் எனபல்வேறு துறைகளில் கிருஷ்ணகுமார் பணியாற்றினார்.
மனித வரலாற்றில் முதல்முறை! 20 ஆயிரம் கோடி டாலர் இழப்பை சந்திக்கிறார் எலான் மஸ்க்
1982ம் ஆண்டில் திருப்புமுனையாக டாடா நுகர்வோர் பிரிவில் மூத்த மேலாண்மைப் பிரிவில் கிருஷ்ணகுமார் இடம் பெற்று ரத்தன் டாடாவுடன் நேரடியாக உரையாடும் வாய்ப்பைப் பெற்றார். டாடா அறக்கட்டளை, நுகர்வோர் பொருட்கள், ஹோட்டல்கள் அனைத்துக்கும்துணை தலைவராக கிருஷ்ணகுமார் பிற்காலத்தில் நியமிக்கப்பட்டார்.
டாடா குழுமத்தில் இருந்து கிருஷ்ணகுமார் ஓய்வு பெற்றாலும், டாடா அறக்கட்டளையில் கிருஷ்ணகுமார் தொடர்ந்தார். மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும் கிருஷ்ணகுமாருக்கு வழங்கப்பட்டது.
2000ம் ஆண்டில் பிரிட்டனின் டெட்லி தேயிலை நிறுவனத்தை டாடா நிறுவனம் கையகப்படுத்த முக்கியக் காரணமாக கிருஷ்ணகுமார் இருந்தார். தற்போது உலகிலேயே 2வது மிகப்பெரிய தேயிலை நிறுவனமாக டாடா குழுமம் உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகுமார் இழப்பு குறித்து ரத்தன் டாடா கூறுகையில் “ கேகே இழப்பின் வலியை வார்த்தைகளால் கூறமுடியாது. என்னுடைய நண்பர், சகஊழியர் கேகேவை இழந்துவிட்டேன். தனிப்பட்ட ரீதியிலும், குழுவாகவும் நாங்கள்பகிர்ந்து கொண்ட பல்வேறு விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன” எனத் தெரிவித்தார்