Share Market Today: பாதாளத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி!நிப்டியும் சரிவு: என்ன காரணம்?

By Pothy RajFirst Published Nov 10, 2022, 9:45 AM IST
Highlights

மும்பை மற்றும் இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று பெருத்த அடியுடன் வர்த்தகத்தை தொடங்கின,  சென்செக்ஸ் மற்றும் நிப்டி புள்ளிகள் படுமோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளன.

மும்பை மற்றும் இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று பெருத்த அடியுடன் வர்த்தகத்தை தொடங்கின,  சென்செக்ஸ் மற்றும் நிப்டி புள்ளிகள் படுமோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளன.

கடந்த இரு நாட்களாக இந்தியப் பங்குச்சந்தையில் ஏற்றமான போக்குக் காணப்பட்ட நிலையில், இன்றுகாலை முதலே கரடியின் பிடியில் சந்தை சிக்கியுள்ளது.

உயர்வில் தொடங்கி சரிந்த பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி:காரணம் என்ன?

அமெரிக்காவில் நடந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின, இதில், ஆளும் ஜனநாயகக் கட்சியைவிட, குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் அதிகளவில் வெற்றி பெற்றனர். இதனால் அதிபர் ஜோ பிடனின் ஆட்சி மீது மறைமுகமான எதிர்ப்பு அதிகரிக்கிறதோ என்ற அச்சம் எழுந்தது. 

அதுமட்டுமல்லாமல் அமெரி்க்காவின் பணவீக்க புள்ளிவிவரங்கள் இன்று வெளியாகின்றன. இதில் அக்டோபர் மாத பணவீக்கம் குறைந்துள்ளதா அல்லது அதிகரித்துள்ளதா என்பது பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவின் டோவ் ஜோன்ஸ், நாஷ்டாக் ஆகியவை 2 சதவீதம் சரிந்தன.
அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு ஆசியச் சந்தையிலும் எதிரொலித்தது. நிக்கி, டாபிக்ஸ், ஹாங் செங், ஷாங்கா சந்தையும் ஒருச தவீதம் சரிந்தன. இதன் தாக்கம் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் முன்பே இந்தியச் சந்தையில் இருந்தது.

உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்றம்: வங்கி பங்கு விர்ர்..

வர்த்தகம் தொடங்கும் முன்பே மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 450 புள்ளிகள் சரிந்தது. வர்த்தகம் தொடங்கியதும் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் 331 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 60,701 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 95 புள்ளிகள் குறைந்து, 18,061 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. 
மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனப் பங்குகளில், 6 நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றத்தில் உள்ளன, மற்ற 24 நிறுவனப் பங்குகள் சரிவில் உள்ளன.

குறிப்பாக, பார்தி ஏர்டெல், இந்துஸ்தான் யுனிலீவர், பவர்கிரிட், நெஸ்ட்லே இந்தியா, டிசிஎஸ், கோடக் வங்கி ஆகிய பங்குகள் லாபத்தில் நகர்கின்றன. மற்ற நிறுவனங்களான டாக்டரெட்டீஸ், என்டிபிசி, விப்ரோ, சன்பார்மா, லார்சன்அன்ட் டூப்ரோ, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி ட்வின்ஸ், டைட்டன், மகிந்திரா அன்ட் மகிந்திரா, டெக் மகிந்திரா உள்ளிட்ட பங்குகள் விலை சரிந்துள்ளன.

பணமதிப்பிழப்பு(Demonetisation)! இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு: நோக்கம் நிறைவேறியதா? உண்மை வெளிவருமா?

இன்று அதானி க்ரீன் எனர்ஜி, எய்ச்சர் மோட்டார்ஸ், அப்பலோ மருத்துவமனை, பெர்கர் பெயின்ட்ஸ், ஜின்டால் ஸ்டீல் மற்றும் பவர், ஜோமேட்டோ ஆகிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வர உள்ளன. 
நிப்டியில் மருந்துத்துறை பங்குகள் மட்டுமே ஓரளவுக்கு உயர்ந்துள்ளன. ஆட்டமொபைல், தகவல் தொழில்நுட்பம், பொதுத்துறை வங்கி, வங்கிப்பங்குகள் சரிந்துள்ளன. 

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் நுகர்வோரான சீனாவில் கொரோனா தாக்கம் இன்னும் குறையாமல் இருப்பதால், கச்சா எண்ணெய் விலை 4வது நாளாகச் சரிந்துள்ளது. கச்சா எண்மெய் பேரல் 93சென்ட் குறைந்து, பேரல் 92.31 டாலராக விற்கப்படுகிறது

click me!