Morgan Stanley: 2027ஆம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: மோர்கன் ஸ்டான்லி கணிப்பு

By Pothy Raj  |  First Published Nov 9, 2022, 4:56 PM IST

2027 ஆம் ஆண்டுக்குள் உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா மாறும் என்று கடன்தர ரேட்டிங் நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி(Morgan Stanley) கணித்துள்ளது.


2027 ஆம் ஆண்டுக்குள் உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா மாறும் என்று கடன்தர ரேட்டிங் நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி(Morgan Stanley) கணித்துள்ளது.

இந்தியாவின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போதுள்ள 3.40 லட்சம் கோடி டாலரில் இருந்து அடுத்த 10 ஆண்டுகளில் 8.50 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளது

Tap to resize

Latest Videos

பேஸ்புக் மெட்டா நிறுவனம் ‘மெகா ஆட்குறைப்பை’ இன்று தொடங்குகிறது

மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் ஆசியப் பரிவு தலைமைப் பொருளாதார வல்லுநர் சேத்தன் அஹியா, பைனான்சியல் டைம்ஸ் நாளேட்டில் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதன் ஜிடிபியில் 40000 கோடி டாலர் அளவு அதிகரித்துக்கொண்டே வரும். இந்த வளர்ச்சி, அமெரிக்கா, சீனாவையும் மிஞ்சும். 
வேலைவாய்ப்பு உருவாக்கம், முதலீட்டைபெருக்க வழிகளைத் தேடுதல், கொள்கையளவில் பெரிய மாற்றஹ்கள், உள்நாட்டளவில் சாதகமான சூழல், சர்வதேச அளவில் ஆதரவு போன்றவை இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும். 

எலான் மஸ்க் சொத்து மதிப்பு 20,000 கோடி டாலருக்கும் கீழ் சரிந்தது: டெஸ்லா பங்குகளையும் விற்றார்

வரிச்சீர்திருத்தம் செய்து ஜிஎஸ்டி வரி கொண்டுவந்தது, கார்ப்பரேட் வரிக் குறைப்பு, உற்பத்தி அடிப்படையிலான ஊக்கம் அளித்தல் போன்றவை அரசின் கொள்கையில் ஏற்பட்ட பெரிய மாற்றங்களாகும். 

உயர்ந்த அடித்தளத்தில் வருமானம் வேகமாக பெருகும் ஒரு கட்டத்தில் இந்தியா நுழைகிறது. சூழலைப் பொறுத்தவரை, இந்தியா தனது ஜிடிபியை 3 லட்சம் டாலர்களாக உயர்த்த 1991ம் ஆண்டிலிருந்து 31 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் எங்கள் கணிப்பின்படி, அடுத்த 7ஆண்டுகளில் 3 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை இந்தியா அடையும்.

மற்ற நாடுகளைவிட இந்தியாவிடம் அதிகளவில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள் பெருகியுள்ளன. ஆதார் அடிப்படையிலான பொது டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. மற்ற நாடுகளின் பொருளாதாரத்தில் இது தனியாரிடமே இருக்கிறது

பணமதிப்பிழப்பு(Demonetisation)! இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு: நோக்கம் நிறைவேறியதா? உண்மை வெளிவருமா?

டிஜி்ட்டல் உள்கட்டமைப்பு வசதியால், வர்த்தகர்களால் எளிதாக தொழில் செய்ய முடிகிறது. இந்தியாவின் கொள்கை அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம், கிழக்கு ஆசிய மாதிரியான ஏற்றுமதியை மேம்படுத்துதல், சேமிப்பை உயர்த்துதல் மற்றும் முதலீட்டிற்காக மறுசுழற்சி செய்தல் போன்றவற்றுக்கு நெருக்கமாக நகர்கிறது.

உதாரணமாக இந்தியாவின் இன்றைய ஜிடிபி என்பது சீனாவின் 2007ம் ஆண்டு மதிப்பாகும். ஏறக்குறைய 15 ஆண்டுகள் வேறுபாடு உள்ளது. ஆனால், இந்தியாவில் உள்ள வேலைபார்க்கும் வயதுள்ள பிரிவினர் அதிகரித்து வருவது, நீண்டகாலத்தில் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்கு சாத்தியங்களை உருவாக்குகிறது. இது சீனாவின் மீடியன் வயதைவிட 11 வயது குறைவாகும். 

இதன் மூலம் இந்தியான் உண்மையான ஜிடிபி வளர்ச்சி சராசரி 6.5 சதவீதமாக இருக்கும், அடுத்துவரும் 10 ஆண்டுகளில் சீனாவின்ஜிடிபி 3.6சதவீதமாகவே இருக்கும் எனக் கணிக்கிறோம்
இவ்வாறு சேத்தன் அஹியா தெரிவித்துள்ளார்.


 

click me!