எலான் மஸ்கின் ட்விட்டர் நிறுவனத்தைத் தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, மெகா ஆட்குறைப்பு பணியை இன்று தொடங்குகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எலான் மஸ்கின் ட்விட்டர் நிறுவனத்தைத் தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, மெகா ஆட்குறைப்பு பணியை இன்று தொடங்குகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூகவலைத்தள நிறுவனமான மெட்டா தனது செலவுகளைக் குறைக்கும் வகையிலும், வருமானம் குறைந்துவருவதைக் காரணம் காட்டியும், ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளது.
undefined
ட்விட்டர் ஊழியர்களை நீக்கியது சரியா?அமெரிக்க சட்டம் சொல்வது என்ன? மஸ்க் மீது வழக்கு
இந்த ஆட்குறைப்பில் பாதிக்கப்படும் ஊழியர்களிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்குள்ளது. இது தொடர்பாக பேஸ்புக் அதிகாரிகளிடமும், தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அமெரிக்காவில் வெளிவரும் புகழ்பெற்ற நாளேடான தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்தியில் “ பேஸ்புக் நிறுவனத்தில் நடந்த அனைத்து குளறுபடிகள், தவறான நடவடிக்கைகளுக்கு மார்க் ஜூகர்பெர்க்தான் பொறுப்பேற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
ஆனால், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளேடு வெளியிட்ட செய்திக்கு, மெட்டா செய்தித்தொடர்பாளர் உடனடியாக பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.
ட்விட்டரைத் தொடர்ந்து பேஸ்புக்கின் மெட்டா நிறுவனமும் ‘மெகா ஆட்குறைப்பில்’ இறங்குகிறது
கடந்த செப்டம்பர் மாதம் மெட்டா சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் பேசுகையில் “ மெட்டா நிறுவனத்தின் வருவாய் குறைந்து வருகிறது,செலவுகளைக் குறைக்க வேண்டியுள்ளது, ஆதலால், அணியினரை மறுகட்டமைப்பு செய்ய இருக்கிறோம்.
ஆதலால், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுப்பதையும் நிறுத்து வைக்கிறோம். 2023ம் ஆண்டில் மெட்டா நிறுவனம் இப்போது இருக்கும் அளவில் இருந்து சற்று சிறியதாக, குறைவான ஊழியர்களுடன் இயங்கும்” எனத் தெரிவித்தார்
பேஸ்புக் நிறுவத்தில் தற்போது 87,000 பேர் பணியாற்றுகிறார்கள். இதில் 10 சதவீதம் ஊழியர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது எனத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 2004ம்ஆண்டு பேஸ்புக் தொடங்கப்பட்டபின், பட்ஜெட் குறைக்கப்படுவது இதுதான் முதல்முறையாகும்.
இந்தியாவின் ட்விட்டர் நிறுவனத்தில் அனைத்து ஊழியர்களும் நீக்கம்: மார்க்கெட்டிங் டீமே காலி!
டிஜி்ட்டல் விளம்பர வருவாய் குறைந்துவருவது, பொருளாதார மந்தநிலை, அதிகமானவட்டி, மெட்டாவெர்ஸுக்கு அதிகமான முதலீட்டைத் திருப்பியது போன்றவை பேஸ்புக் வருமானம் குறையக் காரணமாகும்.
கடந்த வாரம் எலான் மஸ்க் வாங்கிய ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து 3500க்கும் அதிகமான ஊழியர்கள் எந்தவிதமுன் அறிவிப்பும் இன்றி நீக்கப்பட்டனர். எந்த விதமான தகவலும் இல்லாமல் ஒரே ஒரு மின்அஞ்சல் மூலம் ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டது ஊழியர்களிடம் பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியது. இருப்பினும், வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்களில் பலரையும் ட்விட்டர் நிறுவனம் திரும்ப வேலைக்கு அழைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.