Share Market Today: உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்றம்: வங்கி பங்கு விர்ர்..

By Pothy RajFirst Published Nov 9, 2022, 9:54 AM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று காலை வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. வங்கித்துறை, ரியல்எஸ்டேட் துறை பங்குகள் அதிக லாபத்துடன் கைமாறுகின்றன.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று காலை வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. வங்கித்துறை, ரியல்எஸ்டேட் துறை பங்குகள் அதிக லாபத்துடன் கைமாறுகின்றன.

குருநானக் ஜெயந்திக்கு நேற்று விடுமுறை விடப்பட்டதையடுத்து, பங்குச்சந்தை இன்று காலை தொடங்கியது. பொதுத்துறை வங்கிகள் திங்கள்கிழமை வர்த்தகத்தில் நல்ல லாபத்துக்கு கைமாறியதால், வங்கிப்பங்குகளுக்கு இன்று கடும் கிராக்கி இருந்தது. 

எலான் மஸ்க் சொத்து மதிப்பு 20,000 கோடி டாலருக்கும் கீழ் சரிந்தது: டெஸ்லா பங்குகளையும் விற்றார்

சர்வதேச சூழலும் சாதகமாக இருந்தது. அமெரிக்காவின் பணவீக்கம் புள்ளிவிவரங்கள் வர இருக்கும் நிலையில் ஆசியச் சந்தையிலும் வர்த்தகம் ஏற்றத்துடன் இருந்தது. இதன் எதிரொலி இந்தியச் சந்தையிலும் வர்த்தகம் தொடங்கும் முன்பே காணப்பட்டது.

இந்தியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கும் முன்பே, நிப்டி, சென்செக்ஸ் ஏற்றத்துடன் காணப்பட்டன. காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்தது. பின்னர் 142 புள்ளிகளில் 61,327 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 44 புள்ளிகள் அதிகரித்து, 18,247 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

பணமதிப்பிழப்பு(Demonetisation)! இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு: நோக்கம் நிறைவேறியதா? உண்மை வெளிவருமா?

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 பங்குகளில், 7 நிறுவனப் பங்குகளைத் தவிர 23 நிறுவனப் பங்குகள் மதிப்பும் உயர்ந்தன. ரிலையன்ஸ், இந்துஸ்தான் யுனிலீவர், பவர்கிரிட், பஜாஜ்பைனான்ஸ், ஹெச்டிஎப்சி ட்வின்ஸ், டெக்மகிந்திரா பங்குகள் மதிப்புசரிந்தன. 

மாறாக, டாக்டர் ரெட்டீஸ், நெஸ்ட்லேஇந்தியா, ஐடிசி, இன்போசிஸ், லார்சன் அன்ட் டூப்ரோ, ஆக்சிஸ்வங்கி, கோடக்மகிந்திரா, டாடா ஸ்டீல், விப்ரோ, மாருதி, மகிந்திரா அன்ட் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் மதிப்பு உயர்ந்துள்ளன.

நிப்டியில் வங்கித்துறை பங்குகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன, ரியல்எஸ்டேட் துறை, மருந்துத்துறை  பங்குகளும் லாபத்துடன் நகர்ந்து வருகின்றன. 

60 நாட்கள் கெடு!அமெரிக்காவில் ட்விட்டர் பணியிலிருந்து நீக்கப்பட்ட இந்தியர்களுக்குச் சிக்கல்

பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு சாதமான சூழல் நிலவுவதால், நிப்டி விரைவில் புதிய உச்சத்தை எட்டும். அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து  பங்குகளை வாங்கி வருவது முதலீட்டாளர்ளுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் கடந்த அக்டோபர் மாதத்தில் பெரிதாக உயரவில்லை என்ற தகவல் வருவதும் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.  இதனால்தான் கடந்த 8 வர்த்தகங்களில் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.16,670 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனர். டாலர் குறியீடும் 110க்கு கீழ்சரிந்தது. நிப்டியும் புதிய உச்சத்தை விரைவி்ல் எட்டும். 
 

click me!