Elon Musk: எலான் மஸ்க் சொத்து மதிப்பு 20,000 கோடி டாலருக்கும் கீழ் சரிந்தது: டெஸ்லா பங்குகளையும் விற்றார்

By Pothy RajFirst Published Nov 9, 2022, 9:21 AM IST
Highlights

டெஸ்லா மற்றும் ட்விட்டர் உரிமையாளரான எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 20 ஆயிரம் கோடி டாலருக்கும் கீழ் சரிந்தது என்று போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. 

டெஸ்லா மற்றும் ட்விட்டர் உரிமையாளரான எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 20 ஆயிரம் கோடி டாலருக்கும் கீழ் சரிந்தது என்று போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. 

டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவு சரிந்தது. இதையடுத்து, எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 19,560 கோடி டாலராகச் சரிந்தது.

தவறு நடந்துவிட்டது! பணிநீக்கம் செய்யப்பட்ட பலரையும் மீண்டும் அழைக்கிறது ட்விட்டர்

இருப்பினும், உலகளவில் முதல் கோடீஸ்வரராக எலான் மஸ்க் தொடர்கிறார். ட்விட்டர் நிறுவனத்தை 4400 கோடிக்கு எலான் மஸ்க் வாங்கியதால் அவரின் சொத்துக்களில் பெரும்பகுதி செலவாகியுள்ளது. இதனால் எலான் மஸ்கின் சொத்து 7400 கோடி குறைந்தது. 

சிஎப்ஆர்ஏ ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் காரெட் நெல்சன், போர்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “ ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கியபின் அவரின் கவனம் முழுவதும் ட்விட்டர் நிறுவனத்தின் மீதே இருக்கிறது. இது டெஸ்லா பங்குதாரர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்தார்

இந்தியாவின் ட்விட்டர் நிறுவனத்தில் அனைத்து ஊழியர்களும் நீக்கம்: மார்க்கெட்டிங் டீமே காலி!

கடந்த ஜூலை மாதம் எலான் மஸ்க் சொத்து மதிப்பு 6200 கோடி டாலர் குறைந்தது, அமேசான் நிறுவனர் ஜெப் பிஜோஸ் சொத்து மதிப்பு 6300 கோடி டாலராகக் குறைந்தது. அதிலும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு பாதியாகக் குறைந்தது. 

ப்ளூம்பெர்க் செய்தியின்படி, “ 2022ம்ஆண்டில் உலகில் உள்ள 500 கோடீஸ்வரர்கள் 1.40 லட்சம் கோடி டாலரை இழந்துள்ளனர். அதிலும் கடந்த 6 மாதங்களில்தான் அதிகமான இழப்பு நடந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை பங்குச்சந்தையில் விற்பனை செய்துள்ளார். எலான் மஸ்க் ஏறக்குறைய 400 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகளை பங்குச்சந்தையில் விற்பனை செய்துள்ளார் என்று பங்குச்சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை 4400 கோடிக்கு வாங்கி ஒரு வாரத்துக்குள் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்க வேண்டிய நிலைக்கு எலான் மஸ்க் தள்ளப்பட்டுள்ளார். 

ட்விட்டரைத் தொடர்ந்து பேஸ்புக்கின் மெட்டா நிறுவனமும் ‘மெகா ஆட்குறைப்பில்’ இறங்குகிறது

அமெரிக்க பங்குச்சந்தை மற்றும் பரிமாற்ற ஆணையத்திடம் தாக்கல் செய்த அறிக்கையில், எலான் மஸ்க் தன்னிடம் இருந்த டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் 1.90 கோடி பங்குகளை 390 கோடி டாலருக்கு விற்பனை செய்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!