Gold Rate Today: தங்கம் விலை கிடுகிடு உயர்வு! சவரனுக்கு ரூ.450க்கு மேல் அதிகரிப்பு: இன்றைய நிலவரம் என்ன?

By Pothy Raj  |  First Published Nov 9, 2022, 10:20 AM IST

தங்கம் விலை இன்று குறைந்தநிலையில் இன்று கிடுகிடுவென அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.450க்கு மேல் தங்கம் விலை அதிகரித்துள்ளது.


தங்கம் விலை இன்று குறைந்தநிலையில் இன்று கிடுகிடுவென அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.450க்கு மேல் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 57 ரூபாயும், சவரனுக்கு 456 ரூபாயும் அதிகரித்துள்ளது

Tap to resize

Latest Videos

தங்கம் விலை திடீர் சரிவு! நடுத்தரக் குடும்பத்தினருக்கு நிம்மதி! இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,758 ஆகவும், சவரன், ரூ.38,064 ஆகவும் இருந்தது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(புதன்கிழமை) கிராமுக்கு 57 ரூபாய் உயர்ந்து ரூ.4,815 ஆகவும், சவரனுக்கு 456 ரூபாய் ஏற்றம் கண்டு, ரூ.38 ஆயிரத்து 520 ஆகவும் உயர்ந்துள்ளது.கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4,7815க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை தொடர் உயர்வு! நடுத்தரக் குடும்பத்து மக்கள் கலக்கம்: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை திங்கள்கிழமை கிராம் ஒன்றுக்கு 5ரூபாய் மட்டுமே அதிகரித்து, நேற்று 17 ரூபாய் குறைந்தது. ஆனால், இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.57 உயர்ந்து சவரனுக்கு ரூ.456 அதிகரித்துள்ளது. 

தங்கம் விலையில் ஊசலாட்டமான போக்கு நடுத்தரக் குடும்பத்தினரை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை திடீரெனச் சரிவலும், உச்சக்கட்டத்தை நோக்கி நகர்துமாக இருப்பதால், நடுத்தரக் குடும்பத்து மக்கள் கணிக்க முடியாமல் உள்ளனர்.

சர்வதேச அளவில் அமெரிக்க, ஆசியச் சந்தைகள் நிலவரம் சாதகமான நிலையில் இருந்து வருகிறது. அமெரிக்காவில் அக்டோபர் மாத பணவீக்கம் பெரிதாக உயரவில்லை என்ற தகவல்கள் வருகின்றன.

திருமணத்தின் மூலம் ஒரே மாதத்தில் நாட்டில் 3.75 லட்சம் கோடிக்கு வர்த்தகம் எதிர்பார்ப்பு; புதிய ஆய்வில் தகவல்!!

இதனால்தான் பங்குச்சந்தையிலும் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். 
இதன் காரணமாக வரும் நாட்களிலும் தங்கத்தின் மீதான முதலீடு  அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது. ஆதலால், வரும் நாட்களில் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள். 

வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.   வெள்ளி கிராம் ரூ.66.70 ஆக இருந்தநிலையில் 70 காசு உயர்ந்து, ரூ.67.40ஆகவும், கிலோவுக்கு ரூ.700 அதிகரித்து, ரூ. ரூ.67,400 ஆகவும் ஏற்றம் கண்டது.

click me!