Share Market Today: உயர்வில் தொடங்கி சரிந்த பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி:காரணம் என்ன?

By Pothy RajFirst Published Nov 9, 2022, 4:03 PM IST
Highlights

மும்பை, இந்தியப் பங்குச்சந்தைகள் காலை வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கி மாலையில் சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் சரிவில் முடிந்தன. பொதுத்துறை வங்கிப்பங்குகள் ஏற்றத்தோடு முடிந்தன

மும்பை, இந்தியப் பங்குச்சந்தைகள் காலை வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கி மாலையில் சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் சரிவில் முடிந்தன. பொதுத்துறை வங்கிப்பங்குகள் ஏற்றத்தோடு முடிந்தன

சர்வதேச சூழல் சாதகம், அமெரி்க்காவின் அக்டோபர் பணவீக்க புள்ளிவிவரங்கள் பெரிதாக இருக்காது என்ற தகவல், அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு அதிகரி்த்து வருவது, ரூபாய் மதிப்பு உயர்வது போன்றவை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தின.

உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்றம்: வங்கி பங்கு விர்ர்..

இதனால் காலை பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 200 புள்ளிகளும், நிப்டியில் 50 புள்ளிகளும் உயர்ந்தன. முதலீட்டாளர்களும் உற்சாகமாக பங்குகளை வாங்கி கைமாற்றினர். தொடர்ந்து 2வது நாளாக பொதுத்துறை வங்கிப் பங்குகள் ஏற்றத்துடன் பயணித்தன. மருந்துத்துறை, ரியல்எஸ்டேட் துறைப் பங்குகளும் லாபத்துடன் நகர்ந்தன.

இந்த ஏற்றமான சூழல் மாலை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிற்பகலுக்குப்பின் பங்குச்சந்தையில் திடீர் சரிவு காணப்பட்டது. அமெரிக்காவில் வெளியான தேர்தல் முடிவுகளால் பிரிட்டன் மற்றும் அமெரிக்கச் சந்தையும் ஆட்டம் கண்டன. இதன் எதிரொலி இந்தியப் பங்குச்சந்தையிலும் இருந்ததால் பிற்பகலுக்குப்பின் வர்த்தகம் சரிவைநோக்கி பாய்ந்தது.

குஷி! பங்குச்சந்தையில் காளை முகம்! சென்செக்ஸ், நிப்டி ஏற்றம்: வங்கி, உலோகப் பங்குகள் ஜோர்!

மாலை வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 152 புள்ளிகள் சரிந்து, 61,033 புள்ளிகள் சரிந்து நிறைவடைந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 45புள்ளிகள் குறைந்து, 18,157 புள்ளிகளில் முடிந்தது. 

மும்பைபங்குச் சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களில் 7 நிறுவனங்களின்பங்குகள் மட்டுமே லாபம் ஈட்டின. ஐடிசி, டாக்டர் ரெட்டீஸ், இன்டஸ்இன்ட் வங்கி, ஹெச்சிஎல் டெக், கோடக்வங்கி, இன்போசிஸ், ஹெச்டிஎப்சி வங்கி ஆகிய பங்குகள் மட்டுமே லாபத்தில் முடிந்தன.

மற்ற 23 நிறுவனப் பங்குகள்மதிப்பும் குறைந்தன. குறிப்பாக விப்ரோ, பவர்கிரிட் கார்ப்பரேஷன், டிவிஸ் லேப், டெக் மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி,  மாருதி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, லார்சன் அன்ட் டூப்ரோ, என்டிபிசி ஆகிய பங்குகள் சரிந்தன. நிப்டியில் பொதுத்துறை வங்கி, எப்எம்சிஜி பிரிவு ஆகியவைத் தவிர அனைத்து துறைப் பங்குகளும் சரிந்தன. 

பேஸ்புக் மெட்டா நிறுவனம் ‘மெகா ஆட்குறைப்பை’ இன்று தொடங்குகிறது

நிப்டியில் அதானி போர்ட்ஸ், கோல் இந்தியா, ஐடிசி ஆகிய நிறுவனப் பங்குகள் 2 சதவீதம் உயர்ந்தன. ஹின்டால்கோ, பவர்கிரிட்ஆகிய  பங்குகள் மதிப்பு 4 சதவீதம் சரிந்தன

click me!