Meta Layoffs 2022: 11ஆயிரம் பேர் நீக்கம்! ஹெச்1பி விசாவில் வந்து வேலையிழந்தவர்களுக்கு உதவுகிறது மெட்டா

By Pothy Raj  |  First Published Nov 10, 2022, 9:15 AM IST

பேஸ்புக் மெட்டா நிறுவனம் 11 ஆயிரம்  ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கிய நிலையில், அதில் ஹெச்1 பி விசாவில் வந்து வேலையிழந்த இந்தியர்கள், சீன மக்களுக்கு தேவையான குடியேற்ற உதவிகளைச் செய்வதாக உறுதியளித்துள்ளது.


பேஸ்புக் மெட்டா நிறுவனம் 11 ஆயிரம்  ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கிய நிலையில், அதில் ஹெச்1 பி விசாவில் வந்து வேலையிழந்த இந்தியர்கள், சீன மக்களுக்கு தேவையான குடியேற்ற உதவிகளைச் செய்வதாக உறுதியளித்துள்ளது.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியபின், ஏறக்குறைய 3500 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கினார். அதைத் தொடர்ந்து மெகா ஆட்குறைப்பை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவும் எடுத்தது. 

Tap to resize

Latest Videos

பேஸ்புக் மெட்டா நிறுவனம் ‘மெகா ஆட்குறைப்பை’ இன்று தொடங்குகிறது

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் நேற்று விடுத்த அறிவிப்பில், “ விளம்பர வருமானம் குறைந்துவிட்டது. மெட்டாவின் வரலாற்றில் மிகவும் கடினமான காலத்தைச் சந்தித்து வருகிறோம். 

ஆதலால், நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கையை 13 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளோம். ஆதலால் 11 ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்குகிறோம். இவர்களுக்கு 16 வாரங்கள் ஊதியம் இழப்பீடாகத் தரப்படும். நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்க இன்னும் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். புதிதாக ஊழியர்களை எடுப்பதை நிறுத்தியுள்ளோம்.

அதேசமயம், ஹெச்1பி விசாவில் அமெரிக்காவில் வேலைக்கு வந்து, பேஸ்புக்கில் பணியாற்றி, தற்போது வேலையிழந்தவர்களுக்கு குடியேற்றம் தொடர்பான உதவிகளை மெட்டா செய்யும், ஆதரவு அளிக்கும் என உறுதியளிக்கிறோம். இதற்காக குடியேற்ற சிறப்பு அதிகாரி உங்கள் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை செய்வார் ” எனத் தெரிவித்தார்.

 

எலான் மஸ்க் சொத்து மதிப்பு 20,000 கோடி டாலருக்கும் கீழ் சரிந்தது: டெஸ்லா பங்குகளையும் விற்றார்

பெரும்பாலும் ஹெச்1பி விசாவில் அமெரிக்காவுக்கு வேலைக்குச் செல்வதில் அதிகமானோர் இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான். ஆண்டுதோறும் அமெரிக்காவைச் சேர்ந்த ஐடி நிறுவனங்கள் 10ஆயிரம்ஊழியர்களை ஹெச்1பி விசாவில் வேலைக்கு எடுக்கின்றன. 

அமெரிக்காவில் பணியாற்றும் ஹெச்1பி விசா வைத்திருப்பவர்கள் 3 ஆண்டுகள்வரை அங்கு தங்கி பணியாற்றலாம், தேவைப்பட்டால் 3 ஆண்டுகள் நீட்டித்துக்கொள்ள முடியும். 

ஒருவேளை ஹெச்1பி விசாவில் ஒரு நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்று, அங்கு திடீரென வேலையிலிருந்து நீக்கப்பட்டால், 60 நாட்களுக்குள் புதிய வேலையில் சேர வேண்டும். இல்லாவிட்டால் அமெரி்க்காவில் இருந்து வெளியேற வேண்டும். 

பேஸ்புக் ஊழியர்கள் 11,000 பேர் பணிநீக்கம்... மெட்டா நிறுவனம் அதிரடி!!

வாஷிங்டனைச் சேர்ந்த செய்தியாளர் பாட்ரிக் திபோடியோ ட்விட்டரில் குறிப்பிடுகையில் “ பேஸ்புக் நிறுவனத்தின் வேலைநீக்க முடிவால், ஹெச்1பி விசா பணியாளர்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். ஹெச்1பி விசாவில் பணியாற்றும் 15 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமானோரை பேஸ்புக் நிறுவனம் சார்ந்திருப்போர் என்று வகைப்படுத்துகிறது.

ஹெச்1பி விசா வைத்திருப்போர் வேலையிழந்தால் விரைவாக புதிய வேலையைத் தேடாவிட்டால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே வேலையிழந்த ஊழியர்களுக்கு 16 வார ஊதியம், கூடுதலாக 2 வார ஊதியம், அடுத்த 6 மாதங்களுக்கு குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீடு, வேறுவேலை தேடுவதற்கு தேவையான உதவி போன்ற உதவிகளை வழங்குகிறது.

click me!