Share Market Today: சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்வு: உலோகம் ஜொலிப்பு

By Pothy RajFirst Published Jan 13, 2023, 4:06 PM IST
Highlights

வாரத்தின் கடைசிநாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கி ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்தன.

வாரத்தின் கடைசிநாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கி ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்தன.

சென்செக்ஸ் 300 புள்ளிகளுடனும், நிப்டி 98 புள்ளிகளும் உயர்ந்தன. இருப்பினும் நிப்டி, 17ஆயிரம் புள்ளிகளுக்குள்தான் இருக்கிறது, இன்னும் 18ஆயிரத்தைத் தொடவில்லை.

அமெரிக்காவின் டிசம்பர் மாத பணவீக்கமும், இந்தியாவின் டிசம்பர் மாத சில்லறைப் பணவீக்கமும் குறைந்து சாதகமான சூழல் காணப்பட்டது. 

ஊசலாட்டத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் தடுமாற்றம்

அமெரிக்காவின் டிசம்பர் மாத சில்லறைப் பணவீக்கம்6.5 சதவீதமாகக் குறைந்தது. இதனால், வட்டிவீதம் குறையவாய்ப்புள்ளதால், டாலர் குறியீடு 103 ஆகச் சரிந்தது. இதனால் பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை உயர்த்துவதைக் குறைக்கும் எனத் தெரிகிறது. இதன் மூலம் இந்தியச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டைத் திரும்பப் பெறுவதும் குறையும், நிலைத்தன்மை வரும் நாட்களில் ஏற்படும்.

இந்தியாவிலும் டிசம்பர் மாத பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்குள் தொடர்ந்து 2வது மாதாகக் குறைந்துள்ளது. இதனால் வரும் நிதிக்கொள்கைக் குழு கூட்டத்தில் வட்டியை ரிசர்வ் வங்கி குறைவாக உயர்த்தலாம்.

இந்த் தகவல் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. பங்குச்சந்தையிலும் காலையில் ஏற்றதத்துடன் வர்த்தகத்தை தொடங்கி பின்னர் தடுமாற்றத்தைத் சந்தித்தாலும், பிற்பகலில் உயர்ந்தது. இன்போசிஸ், டிசிஎஸ், உலோகத்துறை பங்குகள் சேர்ந்து பங்குச்சந்தையை சரிவிலிருந்து மீட்டன. 

மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 303 புள்ளிகள் உயர்ந்து, 60,261 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்து. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 98 புள்ளிகள் சரிந்து, 17,956 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி தடுமாற்றத்துடன் நிறைவு

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் 21 நிறுவனப் பங்குகள் லாபத்தோடு முடிந்தன, மற்ற 9 நிறுவனப் பங்குகள் சரிவில் முடிந்தன. சன்பார்மா, ஐடிசி, டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி, லார்சன் அன்ட் டூப்ரோ, நெஸ்ட்லேஇந்தியா, டைட்டான் பங்குகள் விலை குறைந்தன

நிப்டி துறைகளில், உலோகம், எரிசக்தி, பொதுத்துறை வங்கி துறைப் பங்குகள் ஒருசதவீதம் லாபத்தில் முடிந்தன. நிப்டியில் அதானி என்டர்பிரைசஸ், டாடா ஸ்டீல், இன்டஸ்இன்ட் வங்கி, எய்ச்சர் மோட்டார்ஸ், இன்போசிஸ் பங்குகள் லாபமடைந்தன, டைட்டன் நிறுவனம், அப்பல்லோ மருத்துவமனை, நெஸ்ட்லே இந்தியா, லார்சன் அன்ட் டூப்ரோ, ஐடிசி பங்கு மதிப்பு சரிந்தன

click me!