Infosys Q3 Results :எதிர்பார்ப்பைவிட எகிறிய இன்போசிஸ் ! 3-ம் காலாண்டில் வலிமையான வருவாய், நிகர லாபம்

By Pothy RajFirst Published Jan 13, 2023, 11:01 AM IST
Highlights

நாட்டின் 2வது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் அக்டோபர்-டிசம்பர் மாதம் முடிந்த 3ம் காலாண்டில்  எதிர்பார்ப்பைவிட அதிகமான லாபத்தையும், வருவாயையும் ஈட்டியுள்ளது.

நாட்டின் 2வது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் அக்டோபர்-டிசம்பர் மாதம் முடிந்த 3ம் காலாண்டில்  எதிர்பார்ப்பைவிட அதிகமான லாபத்தையும், வருவாயையும் ஈட்டியுள்ளது.

கடந்த 3-வது காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் வருவாய் உயர்வை 15 முதல் 16 சதவீதம் மட்டுமே எதிர்பார்த்திருந்தது. ஆனால், எதிர்பார்ப்பைவிட 16 முதல் 16.5 சதவீதம் வரை வருவாய் அதிகரித்துள்ளது. 

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் உள்ள நாடு எது? இந்திய Passport நிலை என்ன?

இன்போசிஸ் நிறுவனம் கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் அதிகமாக 32 ஒப்பந்தங்களை செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்களின் மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 330 கோடி டாலர் மதிப்பாகும். இதில் 36 சதவீத ஒப்பந்தங்கள் புதிய ஒப்ந்தங்களாகும். 

அதுமட்டுமல்லாமல் இன்போசிஸ் தனது நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேறுவதையும் 3வது காலாண்டில் 24 சதவீதமாகக் குறைத்துவிட்டது. கடந்த ஆண்டு இதே 3வது காலாண்டில் 27 சதவீதமாக இருந்த ஊழியர்கள் வெளியேறுவது இந்த ஆண்டில் குறைந்துள்ளது.

3வது காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.6,586 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே 3வது காலாண்டில் இருந்த அளவைவிட 13.4 சதவீதம் அதிகமாகும். வருவாயைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு 3வது காலாண்டைவிட 20.20 சதவீதம் உயர்ந்து, ரூ.38ஆயிரத்து 318 கோடியாக அதிகரி்த்துள்ளது.

2023ல் உலக பொருளாதார மந்தநிலை வரக்கூடும்: உலக வங்கி எச்சரிக்கை

ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் கூறுகையில் “ டிசிஎஸ் நிறுவனத்தைவிட 3வது காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. எதிர்பார்ப்பைவிட இன்போசிஸ் வருமானம், நிகர லாபம் அதிகரித்துள்ளது இன்போசிஸ் வருவாய் ரூ.37,963 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம், நிகர லாபம் ரூ.6,465 கோடியாக இருக்கும் எனக் கணக்கிட்டோம். ஆனால், அனைத்து கணிப்புகளையும் இன்போசிஸ் முறியடித்துவிட்டது.

ஊழியர்கள் வேலையிலிருந்து செல்வதைத் தடுப்பதிலும் இன்போசிஸ் நிறுவனம் 3வது காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தைவிட சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. டிசிஎஸ் நிறுவனம் மிகக்குறைவாக அதாவது 2வது காலாண்டை விட சற்று முன்னேறி, 21.5 சதவீதமாக குறைத்துள்ளது. கடந்த 2வது காலாண்டில் 22 சதவீதமாக இருந்தது

ரூ.3 லட்சம் கோடி காலி! பள்ளத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டிக்கு பெரும்அடி

இன்போசிஸ் சிஇஓ சலில்  பரேக் கூறுகையில் “ 3வது காலாண்டில் எங்கள் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி வலுவாக இருக்கிறது. டிஜிட்டல் மற்றும் சேவை வர்த்தகம் வளர்ந்துள்ளது. சந்தையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று, தொடர்ந்து வளர்ந்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்

click me!