Share Market Live Today: ஊசலாட்டத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் தடுமாற்றம்

By Pothy RajFirst Published Jan 13, 2023, 9:55 AM IST
Highlights

வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் ஊசலாட்டத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.

வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் ஊசலாட்டத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.

அமெரிக்காவின் டிசம்பர் மாத பணவீக்கமும், இந்தியாவின் டிசம்பர் மாத சில்லறைப் பணவீக்கமும் குறைந்துள்ள சாதகமான சூழல் இருந்தபோதிலும் பங்குச்சந்தையில் கடும் ஊசலாட்டம் நிலவுகிறது.
அமெரிக்காவின் டிசம்பர் மாத சில்லறைப் பணவீக்கம்6.5 சதவீதமாகக் குறைந்தது.

இதனால், வட்டிவீதம் குறையவாய்ப்புள்ளதால், டாலர் குறியீடு 103 ஆகச் சரிந்தது. இதனால் பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை உயர்த்துவதைக் குறைக்கும் எனத் தெரிகிறது. இதன் மூலம் இந்தியச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டைத் திரும்பப் பெறுவதும் குறையும், நிலைத்தன்மை வரும் நாட்களில் ஏற்படும்.

இந்தியாவிலும் ரிசர்வ் வங்கி பணவீக்கம் குறைந்ததால், வட்டிவீதத்தை உயர்த்துவதைக் குறைக்கும் எனத் தெரிகிறது. இந்த தகவல் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. பங்குச்சந்தையிலும் காலையில் ஏற்றதத்துடன் வர்த்தகத்தை தொடங்கி பின்னர் தடுமாற்றத்தைத் சந்தித்தது.

ரூ.3 லட்சம் கோடி காலி! பள்ளத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டிக்கு பெரும்அடி

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 125 புள்ளிகள் குறைந்து, 59,832 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 34 புள்ளிகள் சரிந்து, 17,824 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் 11 நிறுவனப் பங்குகள் லாபத்தோடு நகர்கின்றன, மற்ற நிறுவனப் பங்குகள் சரிவில் உள்ளன. டாடா ஸ்டீல், பவர்கிரிட், இன்டஸ்இன்ட் வங்கி, என்டிபிசி, மாருதி, பஜாஜ்பின்சர்வ், இன்போசிஸ், விப்ரோ, டாடா மோட்டார்ஸ் பங்குகள் லாபத்தில் உள்ளன.

நிப்டி துறைகளில், உலோகம், ஊடகம், பொதுத்துறை வங்கி,ரியல்எஸ்டேட் துறைப் பங்குகள் லாபத்தில் உள்ளன. தகவல்தொழில்நுட்பம், மருந்துத்துறை, ஆட்டோமொபைல், எப்எம்சிஜி, நிதிச்சேவை ஆகிய துறைப் பங்குகள் சரிவில் உள்ளன.

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி தடுமாற்றத்துடன் நிறைவு

நிப்டியில் டாடா ஸ்டீல், ஹின்டால்கோ, இன்டஸ்இன்ட் வங்கி, யுபிஎல், கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் லாபத்தில் உள்ளன. எய்ச்சர் மோட்டார்ஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், எச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி, பிபிசில் பங்கு மதிப்பு சரிந்துள்ளது

click me!