Share Market Today: சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி தடுமாற்றத்துடன் நிறைவு

By Pothy RajFirst Published Jan 11, 2023, 3:58 PM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கி, பிற்பகுதியில் மீண்டு தடுமாற்றத்துடன் முடிந்தது.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கி, பிற்பகுதியில் மீண்டு தடுமாற்றத்துடன் முடிந்தது.

இருப்பினும் தேசியப் பங்குச்சந்தையில்நிப்டி இன்னும் 18 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ்தான் இருக்கிறது. சென்செக்ஸ் 61ஆயிரம் புள்ளிகளை எட்டவில்லை.

அமெரிக்காவின் சில்லறைப் பணவீக்க விவரங்கள் இன்று இரவு வெளியாகிறது. பணவீக்கம் புள்ளி விவரங்களைப் பொறுத்து, வட்டிவீதத்தை உயர்த்துவது குறித்து பெடரல் ரிசர்வ் முடிவு செய்யும். அமெரிக்காவில் பணவீக்கத்தை குறைக்க கடும் நடவடிக்கை, வட்டிவீத உயர்வு இருக்கும் என ஏற்கெனவே மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கொளுத்திப்போட்ட ஜேபி மோர்கன்! பார்தி ஏர்டெல் பங்கு மதிப்பு 4 % வீழ்ச்சி!

இதனால் உலக முதலீட்டாளர்கள் அனைவரும், அமெரிக்காவின் டிசம்பர் மாத சில்லறைப் பணவீக்க விவரங்களை எதிர்நோக்கி நோக்கியுள்ளனர். இதனால்தான் தொடர்ந்து 2வது நாளாக இந்தியப் பங்குச்சந்தையும் ஆட்டம் கண்டு சரிந்தது. 

அது மட்டும்லாமல் அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று முதலீட்டை திரும்ப எடுத்துவருவது பெரும் நெருக்கடியை சந்தைக்கு ஏற்படுத்தியுள்ளது. 13 வர்த்தக தினங்களாக அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை எடுத்து வருகிறார்கள், இதுவரை ரூ.16,587 கோடி முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளதும நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

பங்குச்சந்தையில் ஊசலாட்டம்: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் கடும் ஏற்ற இறக்கம்

இதனால் காலையில் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தையில், கடும் ஊசலாட்டத்துடனே வர்த்தகத்தில் நடந்தது. ஜேபி மோர்கன் அறிக்கையால் பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் மதிப்பு 4 சதவீதம் சரிந்தது. இருப்பினும் பிற்பகுதிக்குப்பின் உலோகம், எப்எம்சிஜி துறைப் பங்குகள் கை கொடுத்ததால், சரிவிலிருந்து பங்குச்சந்தை மீண்டது

மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 10 புள்ளிகள் சரிந்து, 60,105 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 19 புள்ளிகள் குறைந்து, 17,895 புள்ளிகளில் முடிந்தது. 

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களின் பங்குகளில், 14 நிறுவனப் பங்குகள் லாபத்திலும் மற்றவை இழப்பிலும் முடிந்தன. சன்பார்மா, அல்ட்ராடெக் சிமெண்ட், லார்சன்அன்ட்டூப்ரோ, டிசிஎஸ்,எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி, விப்ரோ, பஜாஜ்பைனான்ஸ், இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் லாபமடைந்தன

ரூ.3 லட்சம் கோடி காலி! பள்ளத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டிக்கு பெரும்அடி

நிப்டியில் ஹின்டால்கோ, சன்பார்மா, பிபிசிஎல், அல்ட்ராடெக் சிமெண்ட், எச்டிஎப்சி வங்கி பங்குகள் அதிக லாபமடைந்தன. பார்திஏர்டெல், சிப்லா, டிவிஸ் லேப்ஸ், அப்பலோ மருத்துவமனை, எச்யுஎல் பங்குகள் சரிந்தன. 

நிப்டியில் எப்எம்சிஜி, ஆட்டோமொபைல், மருந்துத்துறை, எரிசக்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் விற்கப்பட்டன. உலோகம், வங்கித்துறை, ஐடி துறைப் பங்குகள் அதிகவிலைக்கு வாங்கப்பட்டன

click me!