27 நதிகள் வழியாக, 51நாட்கள் பயணிக்கும் எம்.வி. கங்கா விலாஸ் சொகுசு கப்பலின் டிக்கெட் விலை, தினசரி கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகியுள்ளது.
27 நதிகள் வழியாக, 51நாட்கள் பயணிக்கும் எம்.வி. கங்கா விலாஸ் சொகுசு கப்பலின் டிக்கெட் விலை, தினசரி கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகியுள்ளது.
வாரணாசியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகார்க் வரை 27 நதிகள் வழியே பயணிக்கும் உலகிலேயே மிக நீண்ட நதி வழிப் பயணத்துக்கான கங்கா விலாஸ் சொகுசு கப்பலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
கங்கா விகாஸ் கப்பலில் ஒரு ஜாலியான பயணம்! நீங்க ரெடியா!
27 நதிகள் வழியாக 51 நாட்கள் பயணித்து, 3200 கி.மீ செல்லும் இந்த எம்வி கங்கா விலாஸ் சொகுசு கப்பல் வங்கதேசம் வழியாகச் சென்று அசாம் சென்றடையும். இந்த சொகுசு கப்பலில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் 50 விதமான சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க உள்ளனர். எம் வி கங்கா விலாஸ் கப்பல் 3 அடுக்குகளைக் கொண்ட சொகுசு கப்பலாகும்.
இந்த சொகுசு கப்பல் பாட்னா, குவஹாட்டி, கொல்கத்தா, வங்கதேச தலைநகர் தாக்கா ஆகிய நகரங்கள் வழியாகச் செல்ல முடியும். வாரணாசியில் கங்கா ஆரத்தி, சாரநாத், மஜூலி, வைஷவேட் கலாச்சாரம், சுந்தரவனக் காடுகள், காசிரங்கா பூங்கா உள்ளிட்ட 50 வகையான சுற்றுலாத்தளங்களை காணலாம்.
உலகிலேயே நீண்ட நதிப் பயணம்!கங்கா விலாஸ் கப்பலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
முதல்கட்டமாக ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த 36 சுற்றுலாப் பயணிகள் இதில் பயணிக்கிறார்கள். இந்தக் கப்பலில் மொத்தம் 18 சூட்கள், 3 அடுக்குகள் உள்ளன. 62 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத, சத்தம் எழுப்பாத கப்பலாகும்.
இந்த கப்பலில் பயணிக்கவும், சுற்றுலாத் தளங்களைப் பார்வையிடவும் இரு நபர்களுக்கு வரியுடன் சேர்த்து ரூ.42,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரவு தங்கும் அறை சேர்த்து, ரூ.85 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுமையான 54 நாட்கள் பயணத்துக்கு ஒரு நபருக்கு ஜிஎஸ்டி வரி,இதர வரிகள் சேர்த்து ரூ.40 லட்சம் கட்டணம் நிர்ணயி்க்கப்பட்டுள்ளது.