தங்கம் விலை மெதுவாக உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் தங்கம் விலை ஏற்றத்தை நோக்கி பயணிக்கிறது.
தங்கம் விலை மெதுவாக உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் தங்கம் விலை ஏற்றத்தை நோக்கி பயணிக்கிறது.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 32ரூபாயும், சவரணுக்கு 256 ரூபாயும் அதிகரித்துள்ளது.
மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில்வே டிக்கெட்டில் சலுகை: ஆனால்…!
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,767க்கும், சவரண் ரூ.37,880க்கும் விற்பனை ஆனது. இன்று காலை தங்கத்தின் விலையில் 4-வது நாளாக உயர்ந்துள்ளது.
இதன்படி, சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 32 ரூபாய் அதிகரித்து ரூ4,767ஆகவும், சவரணுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.38,136க்கும் விற்கப்படுகிறது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4767ஆக விற்கப்படுகிறது.
அமெரி்க்க பெடரல் வங்கி வட்டியில் 75 புள்ளிகள் இன்று உயரலாம்? இந்தியாவுக்கு பாதிப்பு வருமா?
தங்கதத்தின் விலை கடந்த தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த வாரத்தின் தொடக்கத்தில் சரிந்த தங்கம் விலை, தற்போது உயர்ந்து வருகிறது. 21 நாட்களுக்குப்பின் மீண்டும் தங்கத்தின் விலை சரவன் ரூ.38ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கடந்த 21 நாட்களாக தங்கம் சவரன் ரூ.37ஆயிரத்துக்குள்ளேதான் ஊசலாடிக்கொண்டிருந்ததே தவிர, ரூ.38ஆயிரத்தைத் தொடவில்லை. முதல் முறையாக 21 நாட்களுக்குப்பின் ரூ38ஆயிரத்தை எட்டியுள்ளது.
அமெரிக்க பெடரல் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டத்தில் வட்டிவீதத்தை 75 புள்ளிகள் உயர்த்தப்பட்டது. இந்த அறிவிப்புக்குப்பின் தங்கம் விலையில் மீண்டும் ரூ.38ஆயிரத்தை எட்டியுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக ரூ.82 ஆக வீழ்ச்சி அடையும்: பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு
வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 1.20 பைசா அதிகரித்து, ரூ.61.20 ஆகவும், கிலோவுக்கு ரூ.1200 அதிகரித்து, ரூ.61,200க்கும் விற்கப்படுகிறது.