Pension: EPFO: பிஎப் உறுப்பினர்கள் அதிக பென்சன் பெற விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு: EPFO புதிய அறிவிப்பு

By Pothy RajFirst Published Feb 27, 2023, 11:37 AM IST
Highlights

அதிக பென்சன் பெறுவதற்கு இபிஎப்ஓ அமைப்பில் இருக்கும் தகுதி வாய்ந்த உறுப்பினர்கள், தங்கள் நிறுவனத்துடன் சேர்ந்து இபிஎப்ஓ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

அதிக பென்சன் பெறுவதற்கு இபிஎப்ஓ அமைப்பில் இருக்கும் தகுதி வாய்ந்த உறுப்பினர்கள், தங்கள் நிறுவனத்துடன் சேர்ந்து இபிஎப்ஓ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிக்க 2023, மார்ச் 3 கடைசித் தேதி என்று குறிப்பிடப்பட்டிருந்து, இதை மாற்றி மே 3ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இபிஎப்ஓ அமைப்பின் இணையதளத்தில் சமீபத்தில்தான் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு உறுப்பினர்கள் விண்ணப்பிக்கும் வசதி உருவாக்கப்பட்டது. இதில் மே 3ம் தேதி கடைசி என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி இன்று கர்நாடகம் பயணம்| சிவமோகா விமானநிலையம் திறப்பு

கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 2014ம் ஆண்டு தொழிலாளர் பென்சன் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவில் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு , தகுதிவாய்ந்த உறுப்பினர்கள் சேர்வதற்கு 4 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.

இபிஎப்ஓ உறுப்பினர்கள் அதிக ஓய்வூதியம் பெற விரும்போவோர், தங்கள் பணியாற்றும் நிறுவனத்துடன் இணைந்து, இபிஎஸ் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என கடந்த வாரம் அறிவித்தது. அதற்காக வழிகாட்டுதல்களையும் இபிஎப்ஓ வெளியிட்டது.

2014, ஆகஸ்ட் 22ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீரப்ப்பின்படி, ஓய்வூதியம் பெறுவதற்கான மாத ஊதிய அளவு ரூ.6500லிருருந்து, ரூ.15ஆயிரமாக உயர்த்தியது. ஊழியர்களும், நிறுவனமும் இணைந்து 8.33 சதவீதம் ஊதியத்தில் பங்களிப்பு செய்ய வேண்டும் எனத் தீர்ப்பளித்தது.

பாஜக வேட்பாளர் வெற்றி!மேகலாயாவில் சாலை விபத்தில் தேர்தல் அதிகாரி பலி

இதன்படி, இபிஎப்ஓ அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, “ தொழிலாளர்கள், தங்கள் பணியாற்றும் நிறுவனங்களுடன் இணைந்து, ஜாயின்ட் ஆப்ஷன் படிவத்தை தாக்கல் செய்யலாம். ஆன்லைனில் இதற்கான வசதி விரைவில் உருவாக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. இதன்படி, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு விண்ணப்பிப்பது

இபிஎப்ஓ இணையதளத்தில் அதிக ஓய்வூதியம் பெறுபவர்கள் விண்ணப்பிக்க தனியாக வசதிவிரைவில் தரப்படும். அவ்வாறு வசதி வரும்போது, ஒவ்வொரு விண்ணப்பத்தையும் பதிவு செய்ய வேண்டும், டிஜிட்டல் ரீதியாக லாக்கின் செய்தபின், விண்ணப்பம் சமர்பித்தலுக்கான எண்  வழங்கப்படும்.

அந்தந்த மண்டல பிஎப் அலுவலகத்தில் உள்ள இதற்குரிய அதிகாரி அதிக ஊதியம் மற்றும் கூட்டுவிருப்பம் தாக்கல் செய்திருந்தால் அதை ஆய்வு செய்து, தங்களின் முடிவை, விண்ணப்பதாரர்களுக்கு மின்அஞ்சல் அல்லது தபால் அல்லது எஸ்எம்எஸ் மூலம் அனுப்புவார்.

விண்ணப்பதாரரிடம் இருந்து ஏதேனும் குறைகள் இருந்தால், கூட்டுவிருப்ப மனு மற்றும் பேமென்ட் நிலுவை இருந்தால், அதை குறைதீர்ப்பு தளத்தில் பதிவு செய்யலாம். 

PAN Card: தெரிந்துகொள்ளுங்கள்| பான் கார்டு தொலைந்துவிட்டால் என்ன செய்வது? எப்படி விண்ணப்பித்து பெறுவது?

தேவையான ஆவணங்கள்

1.    இபிஎப் திட்டத்தில் 26(6) படிவ விருப்பச்சான்று
2.    வைப்புச் சான்று
3.    பணியாற்றும் நிறுவனத்தால் அளிக்கப்பட்ட விருப்பச்சான்று
4.    ரூ.5ஆயிரம் முதல் ரூ.6500 வரம்புக்கு மேல் ஊதியத்தில் பென்சன் நிதி விருப்பச் சான்று
5.    ஏபிஎப்சி ஆதாரச் சான்று

 

click me!