தங்கம் விலை வாரத்தின் முதல்நாள இன்று சரிந்துள்ளது. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்துள்ளது நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஆறுதலை அளித்துள்ளது.
தங்கம் விலை வாரத்தின் முதல்நாள இன்று சரிந்துள்ளது. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்துள்ளது நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஆறுதலை அளித்துள்ளது.
கடந்த 7 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.632 வீழ்ந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 9 ரூபாயும், சவரனுக்கு 72 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு| மகிழ்ச்சியில் மிடில் கிளாஸ் மக்கள்! நிலவரம் என்ன
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,210ஆகவும், சவரன், ரூ.41,680ஆகவும் இருந்தது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(திங்கள்கிழமை) கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து ரூ.5,209ஆகவும், சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து ரூ.41 ஆயிரத்து 608ஆகச் சரிந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,209க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை கடந்தவாரம் முழுவதும் குறைந்திருந்தது, இந்த விலைக் குறைவு இந்தவாரத்தின் தொடக்கமான இன்றும் நீடிக்கிறது. தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில்இருக்கிறது.
கடந்த வாரத்தில் தங்கம் சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில் இன்று மேலும் 72 குறைந்துள்ளது நடுத்தர மக்களுக்கும், நகைப் பிரியர்களுக்கும் ஆறுதலாகவும், கூடுதலாக தங்கம் வாங்கும் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.
தங்கம் விலை மளமளச் சரிவு| சவரனுக்கு ரூ.360 குறைந்தது: நிலவரம் என்ன?
அமெரிக்க பணவீக்கம், பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்த இருக்கும் திட்டத்தால், தங்கம் மீதான முதலீடு குறைந்து அமெரிக்கப் கடன் பத்திரங்கள் மதிப்பு உயரத் தொடங்கியுள்ளது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது. அதுமட்டும்லாமல் முகூர்த்த காலம் பரபரப்பாக இல்லாததால் தங்கத்தின் தேவை குறைந்து வருகிறது.
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.70.00 ஆக இருந்தநிலையில் கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து, ரூ.69.00 ஆகவும், கிலோ ரூ.70,000 ஆக இருந்தநிலையில் கிலோவுக்கு ரூ.1000 சரிந்து, ரூ.69,000 ஆகவும் வீழ்ச்ச்சி அடைந்துள்ளது.