மும்பை பங்குச்சந்தை - தேசிய பங்குச்சந்தை இணைப்பு.. செட்பம்பர் இறுதிக்குள் NCLT-ல் மனு தாக்கல்..

By Ramya s  |  First Published Sep 7, 2023, 3:37 PM IST

தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தை ஆகியவற்றின் சர்வதேச சந்தைகள் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை ஆகியவை இந்தியாவின் இரண்டு முக்கிய பங்குச் சந்தைகள் ஆகும். இவை ஆசியாவின் மிகப்பெரிய பங்குச் சந்தைகளில் ஒன்றாகும். குறிப்பாக மும்பை பங்குச் சந்தை ஆசியாவின் மிகப் பழமையான பங்குச் சந்தைகளில் ஒன்றாகும், ஜூலை 9, 1875 இல் "நேட்டிவ் ஷேர் & ஸ்டாக் ப்ரோக்கர்ஸ் அசோசியேஷன்" என்ற பெயரில் செயல்படத் தொடங்கியது. ஏறத்தாழ 3500 நிறுவனங்களின் பங்குகள் இங்கு வர்த்தகம் செய்யப்படுகின்றன.

ஆனால் அதே நேரம் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் தேசிய பங்குச் சந்தை இந்தியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தையாகும். தேசிய பங்கு சந்தையின் செயல்பாடு 1992 இல் தொடங்கியது, இது இந்தியாவிற்கு முழு தானியங்கி வர்த்தகத்தை (Automatic trade) கொண்டு வந்த முதல் பரிமாற்றமாகும். கட்டிடங்களில் நடந்த பங்கு வர்த்தகத்தை, அவரவர் இடத்தில் இருந்து கம்ப்யூட்டர் மூலம் செய்ய முடியும் என்ற முறை அறிமுகம் செய்யப்பட்டது. உலகம் முழுவதும் இருக்கும் பல்வேறு பங்குச்சந்தைகளில் ஒரு நாளில் நடக்கும் வர்த்தகத்தில், மிக அதிகமாக வர்த்தகம் நடப்பதில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. தற்போது 1500 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் இங்கு வர்த்தகம் செய்யப்படுகின்றன. 

Tap to resize

Latest Videos

30 நாள் லீவு பாக்கி இருந்தால் சம்பளத்துடன் கூடுதல் போனஸ்! தொழிலாளர் சட்டங்களில் வரவுள்ள அதிரடி மாற்றங்கள்!

இந்த நிலையில் தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தை ஆகியவற்றின் சர்வதேச சந்தைகள் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகளாவிய போட்டியாளர்களுடன் போட்டியிட ஏதுவாக ஒரு ஒருங்கிணைந்த தளத்தை உருவாக்கும் நோக்கில் இந்த இணைப்பு விரைவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான மனு செப்டம்பர் இறுதிக்குள் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (National Company Law Tribunal) முன்பு தாக்கல் செய்யப்ப்பட உள்ளதாகவும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த இணைப்பு வணிகத்தை ஒன்றாக மேற்கொள்ள உதவும் என்றும், இது ஒரு ஒருங்கிணைந்த வர்த்தக தளத்தை சமாளிக்க வேண்டியிருக்கும் என்பதால், இது பங்குச்சந்தை தரகர்களுக்கும் உதவும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் "முதலீட்டாளர்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த தளத்தை வழங்குவதே இதன் நோக்கம். இது பணப்புழக்கம் பிரிந்து செல்வதையும் தடுக்கும்,” என்று பங்குச்சந்தை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

click me!