30 நாள் லீவு பாக்கி இருந்தால் சம்பளத்துடன் கூடுதல் போனஸ்! தொழிலாளர் சட்டங்களில் வரவுள்ள அதிரடி மாற்றங்கள்!

Published : Sep 06, 2023, 05:02 PM ISTUpdated : Sep 06, 2023, 05:21 PM IST
30 நாள் லீவு பாக்கி இருந்தால் சம்பளத்துடன் கூடுதல் போனஸ்! தொழிலாளர் சட்டங்களில் வரவுள்ள அதிரடி மாற்றங்கள்!

சுருக்கம்

விடுப்பு நாட்கள் 30 க்கு மேல் இருக்கும் பட்சத்தில், நிறுவனமோ அல்லது முதலாளியோ பணியாளருக்குக் கூடுதல் விடுப்புக்குக் கட்டணம் செலுத்த வேண்டும்.

இன்னும் நடைமுறைப்படுத்தப்படாத நான்கு தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வரும்போது பல துறைகளில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரப்பட உள்ளன.

சட்டங்கள் நடைமுறைக்கு வந்தவுடன், பணியாளர்கள் ஓர் ஆண்டில் 30 நாட்களுக்கு மேல் ஊதிய விடுப்புகளை பயன்படுத்தாமல் வைத்திருக்க முடியாத நிலை ஏற்படும். விடுப்பு நாட்கள் 30 க்கு மேல் இருக்கும் பட்சத்தில், நிறுவனமோ அல்லது முதலாளியோ பணியாளருக்குக் கூடுதல் விடுப்புக்குக் கட்டணம் செலுத்த வேண்டும்.

தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணிச்சூழல் சட்டம், ஊதியம் குறித்த சட்டம்; தொழிலகத் தொடர்புகள் சட்டம், சமூகப் பாதுகாப்புச் சட்டம் ஆகிய நான்கு தொழிலாளர் சட்டங்கள் ஏற்கனவே நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவை அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வரும் தேதிக்காக மட்டுமே காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

UPI ஐப் பயன்படுத்தி ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா.? முழு விபரம் இதோ !!

இந்த நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களில் ஒன்றான தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணிச்சூழல் சட்டத்தின் கீழ் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஆனால், 'பணியாளர்' என்ற சொல் நிர்வாகம் அல்லது மேற்பார்வைப் பணிகளில் இல்லாத இதர பணியாளர்களையே குறிக்கிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இதைப்பற்றி, INDUSLAW நிறுவனத்தின் பங்குதாரர் சௌம்ய குமார் கூறுகையில், “பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணிச்சூழல் சட்டம் 2020 (OSH Code) பிரிவு 32 இன் கீழ், வருடாந்தர விடுப்பு பெறுதல், ஒரு வருடத்தில் பயன்படுத்தாம் பாக்கி வைத்துள்ள விடுப்பை அடுத்த ஆண்டு விடுப்பில் சேர்த்துக்கொள்ளும் வசதி, பயன்படுத்தாத விடுப்பு நாட்களுக்கு பணம் பெறுவது போன்ற அம்சங்கள் தொடர்பான பல நிபந்தனைகள் உள்ளன. பிரிவு 32(vii) இல் ஒரு ஊழியர் ஒரு வருடத்தில் அதிகபட்சம் 30 விடுப்பு நாட்களை அடுத்த ஆண்டிற்குக் கொண்டு செல்ல அனுமதிக்கிறது" என்று விளக்குகிறார்.

ஆண்டின் இறுதியில் பாக்கி இருக்கும் வருடாந்திர விடுப்பு நாட்கள் 30 ஐத் தாண்டினால், அந்த ஊழியர் அதிகப்படியான விடுப்பு நாட்களுக்குப் பதிலாக பணமாகப் பெற்றுக்கொள்ளலாம். 30 நாட்களை அடுத்த ஆண்டில் எடுத்துக்கொள்ளலாம்" என்றும் அவர் தெரிவிக்கிறார்.

உங்களுக்கு திருமணம் ஆகவில்லையா? மாதம் தோறும் ரூ.2,750 கிடைக்கும் - அரசின் அதிரடி அறிவிப்பு !!

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக இந்தியா வளர 30 ஆண்டுகள் ஆகலாம்: ரகுராம் ராஜன்
IndiGo: 10,000 கார்கள், 9,500 ஹோட்டல் அறைகள், ரூ.827 கோடி ரீஃபண்ட்... மீண்டும் மீண்டு வந்த இண்டிகோ!