பார்ச்சூன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல்: தட்டித் தூக்கிய அம்பானி, அதானி!

By Manikanda Prabu  |  First Published Sep 6, 2023, 5:10 PM IST

பார்ச்சூன் இந்தியா 2023 ஆம் ஆண்டிற்கான பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோர் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்


பார்ச்சூன் இந்தியா 2023 ஆம் ஆண்டிற்கான பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 99.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். 63.71 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் அதானி குழும நிறுவனங்களின் தலைவரான கவுதம் அதானி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில், 34.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்துக்களுடன், ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் மிஸ்திரி குடும்பம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் உரிமையாளர்களான பூனாவல்லா குடும்பம், 32.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்துக்களுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

Latest Videos

undefined

பங்குத் தரகரும், டி-மார்ட் வணிக நிறுவனத்தின் தலைவரான ராதாகிஷன் தமானி, 23.4 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், ஷிவ் நாடார் குடும்பம், அசிம் பிரேம்ஜி, கோத்ரேஜ், பஜாஜ் மற்றும் குமார் மங்கலம் பிர்லா ஆகியோர் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

SEBI : குட் நியூஸ்.. இனி 1 மணி நேரத்தில் செட்டில்மென்ட் கிடைக்கும்: செபி தலைவர் மாதபி பூரி புச் தகவல்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து ஜியோ ஃபைனான்ஸ் நிறுவனத்தை பிரித்து தனியாக பட்டியலிட்டுள்ளது ரிலையன்ஸ் குழுமம். தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை விற்பனை ஆகிய இரண்டையும் பிரிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் அதன் பங்குதாரர்களின் செல்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட குறுகிய விற்பனையாளரான ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து, ஆதானி குழும பங்குகள் வீழ்ச்சியடைந்தன. குற்றச்சாட்டுகளை மறுத்த அதானி குழுமம், விளம்பரதாரர் மட்டத்தில் கடனை முன்கூட்டியே செலுத்த பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை விற்றது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து, அதானியின் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களின் பங்குகள் மீண்டு வந்துள்ளன. இருப்பினும் அவை கடந்த ஆண்டு செப்டம்பரில் எட்டிய உச்சத்தை விட கீழேயே உள்ளன.

click me!