பாலில் இறங்கிய  பாபா ராம்தேவ் ........!

First Published Oct 16, 2016, 7:45 AM IST
Highlights


பாலில் இறங்கிய  பாபா ராம்தேவ் ........!

ஷாம்பு முதல் நூடுல்ஸ் வரை தன் சந்தையை விரிவுபடுத்தியுள்ள யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி  நிறுவனம் தற்போது,  பல  துறைகளில்  கால் பதிக்க  இறங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, அடுத்ததாக பால் உற்பத்தியில் கால் பதிக்கவுள்ளது.

இந்தியா முழுவதும், உள்நாட்டு பொருட்களை பயன்படுத்திவதே  , பதஞ்சலியின் வெற்றிக்குக் காரணம்  என தெரிகிறது.

. தற்போது ,அடுத்ததாக பால் உற்பத்தியில் களம் இறங்கிய பதஞ்சலி நிறுவனம் 1940  ஆம் ஆண்டுகளில், பிரேசிலுக்கு பால் உற்பத்திக்காக எடுத்துச் செல்லப்பட்ட இன பசுக்களின் விந்தணுக்களை, அந்நாட்டில் இருந்து எடுத்து வந்து செயற்கை செறிவுட்டல் மூலம் பசுக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது  பதஞ்சலி நிறுவனம் .

இந்த பசுக்கள்  அதிக பால் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்பதால்,   இந்த  துறையிலும்  நல்ல  வெற்றி அடையும் என்ற  நம்பிக்கையில்  கால்  பதிகிறது பதஞ்சலி  நிறுவனம்....!

பால் உற்பத்தியில் ஏற்கெனவே, உலக அளவில் முதலிடத்தில் இருப்பது இந்தியாதான் என்பது  கூடுதல் சிறப்பு ....!

click me!