குழந்தைகளுக்கு அரை டிக்கெட் எடுக்க போறீங்களா.. இந்திய ரயில்வே டிக்கெட் விதிகள் மாற்றம்..

Published : Apr 28, 2024, 05:12 PM IST
குழந்தைகளுக்கு அரை டிக்கெட் எடுக்க போறீங்களா.. இந்திய ரயில்வே டிக்கெட் விதிகள் மாற்றம்..

சுருக்கம்

இந்திய ரயில்வே டிக்கெட் விதிகளின்படி, இப்போது ரயில்வேயில் அரை டிக்கெட்டில் இந்த சலுகை கிடைக்காது. விதி மாற்றப்பட்டுள்ளது.

ரயில் பயணத்தின் போது ஒரு குழந்தை அரை டிக்கெட்டை வாங்கினால், அவருக்கு விருப்பமான காப்பீட்டு திட்டத்தின் பலன் கிடைக்காது. IRCTC-யின்படி, முழு கட்டணத்தையும் செலுத்தி இருக்கையை முன்பதிவு செய்த பின்னரே காப்பீட்டின் பலன் கிடைக்கும். மேலும், ஐஆர்சிடிசி ரயில் பயணிகள் விருப்பக் காப்பீட்டின் ஒரு பயணிக்கான பிரீமியத்தை ஏப்ரல் 1 முதல் 45 பைசாவாக உயர்த்தியுள்ளது. முன்பு இது 35 பைசாவாக இருந்தது. IRCTC ஆவணத்தின்படி, இரயில் பயணிகள் விருப்பக் காப்பீட்டுத் திட்டத்தின் பலன் இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே கிடைக்கும். அதாவது, ரயில்வே டிக்கெட் கவுன்டர்கள், தனியார் ரயில் முன்பதிவு கவுன்டர்கள் அல்லது தரகர்களிடம் இருந்து வாங்கும் டிக்கெட்டுகளுக்கு காப்பீடு திட்டம் பொருந்தாது.

AC-1,2,3, ஸ்லீப்பர், பெர்த் போன்ற அனைத்து ரயில் வகுப்புகளின் உறுதிப்படுத்தப்பட்ட, RAC டிக்கெட்டுகளுக்கு இந்த வசதி பொருந்தும். காத்திருப்புப் பட்டியலில் உள்ள ரயில்வே பயணிகள் காப்பீட்டுத் திட்டத்திற்குத் தகுதி பெற மாட்டார்கள். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, ரயில்வே பயணிகள் காப்பீட்டு திட்டத்தின் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். இதையடுத்து, ரயில்வே பயணிகளின் மொபைல் மற்றும் இ-மெயில் ஐடிக்கு, இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து மெசேஜ் வருகிறது. சில காரணங்களால் ரயில் மாற்றப்பட்ட பாதையில் இயக்கப்பட்டாலும், பயணிகளுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்கும். மாற்று ரயில் முன்பதிவில் பயணிகளுக்கு காப்பீட்டு சலுகைகளும் கிடைக்கும்.

தவிர்க்க முடியாத காரணங்களால் ரயில்வே பயணிகளை சாலை மார்க்கமாக அவர்களது இலக்குக்கு கொண்டு சென்றால், அத்தகைய சூழ்நிலையிலும் பயணிகள் காப்பீட்டு சலுகைகளுக்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள். காப்பீட்டுத் தொகைக்கு வாரிசு இல்லையென்றால், காப்பீட்டுக் கோரிக்கை நீதிமன்றத்தில் இருந்து வழங்கப்படும். ரயில் பயணி இறந்தால் ரூ.10 லட்சமும், பகுதி ஊனம் ஏற்பட்டால் ரூ.7.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தால் ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என்பது தெரிந்ததே. இது தவிர சாலை போக்குவரத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. ரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையின்படி, 2018-19 ஆம் ஆண்டில், 34.40 கோடி ரயில் பயணிகள் காப்பீடு செய்யப்பட்டுள்ளனர்.

காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமியமாக ரூ.8.53 கோடி பெற்றுள்ளன. 2019-20 ஆம் ஆண்டில், 27.30 கோடி பயணிகள் காப்பீட்டு பிரீமியமாக 13.38 கோடி ரூபாய் செலுத்தியுள்ளனர். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 2018-19ல் ரூ.6.12 கோடியும், 2019-20ல் ரூ.3.73 கோடியும் க்ளைம் செய்துள்ளன. இரயில்வே பயணிகள் விருப்பக் காப்பீட்டுத் திட்டம் செப்டம்பர் 2016 இல் தொடங்கப்பட்டது. அப்போது ஒரு பயணிக்கான காப்பீட்டுத் தொகை 0.92 பைசாவாக இருந்தது, அதை அரசாங்கமே செலுத்தியது. ஆகஸ்ட் 2018 இல், பிரீமியம் ஒரு பயணிக்கு 0.42 பைசாவாக குறைக்கப்பட்டது மற்றும் பயணிகளின் சுமையை ஏற்றியது. பின்னர் மீண்டும் குறைக்கப்பட்டது.

Mileage Bike: மைலேஜ் 70 கிமீ.. விலையோ ரூ.60 ஆயிரம் தான்.. நல்ல மைலேஜ் பைக்கை உடனே வாங்குங்க..

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!
புதிய தொழிலாளர் சட்டத்தால் 'டேக் ஹோம்' சம்பளம் குறையுமா? மத்திய அரசு விளக்கம்!