குரூப் புக்கிங் செய்த பின்னர் தனிநபரின் ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்வது எப்படினு தெரியுமா?

By Ma riya  |  First Published May 31, 2023, 11:22 AM IST

குரூப் புக்கிங்கில் இருக்கும் தனிநபருடைய ரயில் டிக்கெட்டை எளிமையாக ரத்து (cancel) செய்வது எப்படி என இங்கு காணலாம். 


ஏதேனும் வீட்டுக்கு விசேஷங்களுக்காக அல்லது சுற்றுலா தலத்திற்கு பயணம் செய்ய என மொத்தமாக குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களுக்கும் சேர்த்து டிக்கெட் புக் செய்வோம். ஆனால் அதில் யாரேனும் ஒருவர் திடீரென வரவில்லை என பின்வாங்கி விடுவார். எல்லா பயணத்திட்டங்களிலும் இப்படி ஏதேனும் ஒரு குளறுபடி வரத்தான் செய்யும். இந்த மாதிரி சமயங்களில் அந்த தனிநபருக்கு மட்டும் டிக்கெட் கேன்சல் செய்யும் வசதி உள்ளது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அது தெரிவதில்லை. அதனால் கேன்சல் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். ஆனால் அதனால் நமக்கு தானே செலவு செய்த காசு நஷ்டம். இனி அப்படி ஆகாமல் இருக்க இந்தக் கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். குரூப் புக்கிங்கில் இருக்கும் தனிநபருடைய ரயில் டிக்கெட்டை எளிமையாக ரத்து (cancel) செய்வது எப்படி என இங்கு காணலாம். 

ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளத்தில் டிக்கெட் கேன்சல் செய்வது எளிமையான வழிமுறைதான். ஒரு டிக்கெட்டை மட்டும் நாம் ரத்து செய்வது எளிமையான செயல்முறைதான். எடுத்துக்காட்டாக 3-4 இருக்கைகளை நாம் முன்பதிவு செய்த பின்னர் அதில் 1 அல்லது 2 ரத்து செய்ய நினைத்தால் என்ன செய்ய வேண்டும்?

Tap to resize

Latest Videos

ரயில் டிக்கெட் ரத்து செய்யும் முறை: 

  1. இ-டிக்கெட்டுகளை ரத்து செய்ய முதலாவதாக IRCTC இ-டிக்கெட் இணையதளத்தில் www.irctc.co.in  உள்நுழையுங்கள். 
  2. உங்களுடைய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்து உள்நுழையவும். 
  3. இ-டிக்கெட்டை ரத்து செய்ய, "எனது பரிவர்த்தனைகள்" என்ற ஆப்சனுக்குள் நுழையவும்.  
  4. எனது கணக்கு என்ற மெனுவின் கீழே இருக்கும் "புக்கிங் ஆன டிக்கெட் வரலாறு" இணைப்பை தொடுங்கள்.
  5. இப்போது நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை பிரிவில் காணமுடியும்.
  6. இதில் ரத்து செய்ய விரும்பும் டிக்கெட்டைத் தேர்ந்தெடுத்து, அதில "டிக்கெட் ரத்துசெய்" என்ற விருப்பத்தை உறுதி செய்யவும். 
  7. டிக்கெட் ரத்து செய்ய வேண்டிய பயணியின் பெயரைத் தேர்ந்தெடுத்து ரத்துசெய்தால் போதும். டிக்கெட் ரத்துசெய்ததை உறுதிப்படுத்த அங்கு கொடுக்கப்பட்டுள்ள உறுதிப்படுத்தல் பாப்பில் சரி என்பதை தொடவும். 

நீங்கள் ரயில் டிக்கெட் ரத்து செய்தது வெற்றி அடைந்த பின்னர் ரத்து செய்யப்பட்டதற்கான தொகை அளிக்கப்படும் உங்களுடைய கணக்கிற்கு டிக்கெட் பணம் வந்து சேரும் இது குறித்த விபரங்கள் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கும் மின்னஞ்சல் இருக்கும் அனுப்பப்படும்.  

இதையும் படிங்க: Indian Railways: கன்பார்ம் ஆன ரயில் டிக்கெட்டை ஐஆர்சிடிசி இணையதளத்தில் மாற்றுவது எப்படி?

click me!