நிலையற்ற உலகப் பொருளாதாரம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிகழ்ந்து வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியப் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் இன்று துவக்கத்தில் சுமார் 929.74 புள்ளிகள் இறங்கியது.
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாகவும் அமெரிக்காவில் பணவீக்கம் தொடர்பான புள்ளி விவரங்களும் இந்திய பங்குச் சந்தையை இன்று பதம் பார்த்துள்ளது. வெளிநாட்டு முதலீடு குறைந்து, ஏற்கனவே செய்யப்பட்டு இருந்த முதலீடுகளும் வெளியேற துவங்கியுள்ளது. இதனால் இன்றைய பங்குச் சந்தை வர்த்தக துவக்கத்தில் சென்செக்ஸ் பெரியளவில் அடி வாங்கியது. சுமார் 929.74 புள்ளிகள் இறங்கி முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
பங்குச் சந்தையின் முந்தைய நாள் வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் இன்று 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் வர்த்தகத்தில் 929.74 புள்ளிகள் சரிந்து, 73,315.16 புள்ளிகளில் இன்றைய வர்த்தகம் துவங்கியது. இதேபோன்று நிப்டி எனப்படும் தேசிய பங்குச் சந்தையில் 216.9 புள்ளிகள் சரிந்து 22,302.50 புள்ளிகளில் வர்த்தகம் துவங்கியது.
Today Gold Rate : தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. சரசரவென குறைந்தது தங்கம் விலை..
காலை 11 மணிக்கு மேல் சென்செக்ஸ் புள்ளியில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. சென்செக்ஸ் 400 புள்ளிகள் மட்டுமே குறைந்து வர்த்தகம் செய்தது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டு இருக்கும் பதற்றத்தால் சென்செக்ஸ் சரிவு கண்டு இருந்தது. மேலும் அமெரிக்காவின் பெடரல் வங்கி தொடர்ந்து வட்டி விகிதங்களை அதிகமாக வைத்து இருக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
சென்செக்ஸில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ. 5 லட்சம் கோடி குறைந்து ரூ. 394.68 லட்சம் கோடியாக இருந்தது. நிஃப்டியில் இடம் பெற்று இருக்கும் பிஎஸ்யு வங்கி, ரியாலிட்டி, மீடியா ஆகியவற்றின் பங்குகளின் மதிப்பு 2% சரிவுடன் துவங்கியது. நிஃப்டி ஆட்டோ, ஃபைனான்சியல், மெட்டல், பார்மா மற்றும் ஆயில் அண்டு கேஸ் 1 முதல் 2 சதவீத நஷ்டத்துடன் துவங்கியது.
PAN Card : பான் கார்டில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி?