பிக்சட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கிகள்.. எவை தெரியுமா? முழு பட்டியல் இதோ.. நோட் பண்ணுங்க!

By Raghupati R  |  First Published Apr 13, 2024, 9:58 PM IST

குறிப்பிட்ட இந்த 5 வங்கிகள் 3 வருட எப்டி எனப்படும் பிக்சட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி கொடுக்கின்றன. இது தொடர்பான முழுமையான பட்டியலை இங்கே பாருங்கள்.


வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக்கான பாதுகாப்பான முதலீட்டுக்கு நிலையான வைப்புத்தொகையை (FD) இன்னும் சிறந்த தேர்வாகக் கருதுகின்றனர். நிலையான வைப்புகளில் முதலீடு செய்வது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உங்களுக்கு உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் 3 வருட FD மிகவும் பிரபலமானது ஆகும்.

நாட்டின் பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 3 வருட FDக்கு பம்பர் வட்டியை வழங்குகின்றன. 3 வருட பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 8.60% வரை வட்டி அளிக்கும் 5 வங்கிகளைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

Tap to resize

Latest Videos

எஸ்பிஎம் வங்கி

SBM வங்கி அதன் பொது வாடிக்கையாளர்களுக்கு 3 வருட FDக்கு அதிகபட்சமாக 8.10% வட்டி அளிக்கிறது. அதேசமயம் வங்கி தனது மூத்த குடிமக்களுக்கு 8.60% வரை வட்டி வழங்குகிறது.

DCB வங்கி

DCB வங்கி அதன் பொது வாடிக்கையாளர்களுக்கு 3 வருட FDக்கு அதிகபட்சமாக 8% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 8.50% வட்டியும் வழங்குகிறது.

யெஸ் வங்கி

யெஸ் பேங்க் அதன் பொது வாடிக்கையாளர்களுக்கு 3 வருட FD க்கு 7.75% வட்டியும் அதே காலக்கட்டத்தில் அதன் மூத்த குடிமக்களுக்கு 8.25% வட்டியும் வழங்குகிறது.

Deutsche Bank

Deutsche Bank அதன் பொது வாடிக்கையாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு FD க்கு 7.75% வட்டியை வழங்குகிறது, அதே காலக்கட்டத்தில் அதன் மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டியையும் வழங்குகிறது.

Bank Locker Rule: வங்கியில் லாக்கர் பயன்படுத்துகிறீர்களா.? இந்த ரூல்ஸ் எல்லாம் மாறிப்போச்சு.. நோட் பண்ணுங்க!

click me!