World Bank Chief : உலக வங்கியின் தலைவராகும் இந்தியர்.. யார் இந்த அஜய் பங்கா.?

By Raghupati R  |  First Published Mar 31, 2023, 8:32 AM IST

உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா தேர்வாக உள்ளார்.


உலக வங்கி குழுமத்தின் அடுத்த தலைவர் பதவிக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மார்ச் 29 புதன்கிழமை முடிவடைந்தது. 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிர்வாகி அஜய் பங்கா, அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் பரிந்துரைக்கப்பட்டார். உலக வங்கி குழுமத்தின் நிர்வாகக் குழு நேற்று (வியாழக்கிழமை), அமெரிக்க ஆதரவுடைய முன்னாள் மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பங்கா ஒருவரை மட்டுமே நிறுவனத்தின் அடுத்த தலைவராகப் பரிசீலிப்பதாகக் கூறியது.

Tap to resize

Latest Videos

ஏனெனில் வேறு எந்த வேட்பாளர்களும் பரிந்துரைக்கப்படவில்லை.  உலக வங்கி குழுமத்தின் அடுத்த தலைவர் பதவிக்கான வேட்புமனுவை சமர்பிப்பதற்கான காலம் மார்ச் 29 புதன்கிழமையுடன் முடிவடைந்தது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிர்வாகி அஜய் பங்கா பிப்ரவரி 23 அன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் பரிந்துரைக்கப்பட்டார்.

பிப்ரவரி 23 அன்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வளரும் நாடுகளில் வெற்றிகரமான நிறுவனங்களை வழிநடத்தும் விரிவான அனுபவமுள்ள வணிகத் தலைவரான அஜய் பங்காவை உலக வங்கியின் தலைவராக அமெரிக்கா பரிந்துரைப்பதாக அறிவித்தார். அப்போது பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "வரலாற்றின் இந்த முக்கியமான தருணத்தில் உலக வங்கியை வழிநடத்த அஜய் தனித்துவமாகத் தயாராக இருக்கிறார்" என்று பைடன் கூறினார்.

இதையும் படிங்க..ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ

அஜய் பங்கா தற்போது ஜெனரல் அட்லாண்டிக்கில் துணைத் தலைவராக பணியாற்றுகிறார். முன்னதாக, அவர் மாஸ்டர்கார்டின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். மகாராஷ்டிராவின் புனே நகரில் பிறந்த பங்கா, டில்லி பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (IIM-A) நிர்வாகத்தில் பிஜிபியும் பெற்றுள்ளார். 2016 ஆம் ஆண்டில், அவருக்கு பத்மஸ்ரீ - இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருது வழங்கப்பட்டது. நெஸ்லே இந்தியா, சிட்டிகுரூப் போன்றவற்றில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..Google Pay, PhonePe or Paytm யூசருக்கு குட் நியூஸ்.. UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது

இதையும் படிங்க..கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறதா பாஜக.? காங்கிரஸ் கதி.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?

click me!