UPI : ஏப்ரல் -1 முதல் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம்! NPCI சொல்வது என்ன?

By Asianet TamilFirst Published Mar 29, 2023, 11:04 AM IST
Highlights

UPI மூலம் மேற்கொள்ளப்படும் சில பரிவர்த்தனைகளில் பரிமாற்றக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக NPCI ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
 

தேசிய பணப்பரிவரத்தனை கழகமான (NPCI - National payment corporation of india) வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், வாலட் அல்லது கார்டு போன்ற ப்ரீபெய்டு கருவிகளை பயன்படுத்தி யுனிஃபைட் பேமெண்ட் இன்டர்ஃபேஸ் (UPI) மூலம் மேற்கொள்ளப்படும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு பரிமாற்றக் கட்டண வசூலிக்க பரிந்துரைத்துள்ளது. அதன்படி, ஒரு பொருளை ஆன்லைனில் வாங்கும் போது அதன் விலை அதிகமாக இருக்கும். NPCI யின் சுற்றறிக்கை மற்றும் லைவ் மின்ட் அறிக்கையின் படி ரூ.20,000 மேல் உள்ள பணப் பரிவர்த்தனைகளுக்கு 1.1% வரை (PPI) Prepaid Payment Instrument கட்டணம் விதிக்கப்படும்.

பரிமாற்றக் கட்டணம், பொதுவாக பணப் பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்வதற்கும், செயலாக்குவதற்கும், மற்றும் அதை அங்கீகரிக்கும் செலவை ஈடுகட்ட விதிக்கப்படுகிறது. இந்த புதிய விதி வரும் ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வருகிறது. மேலும், ஆன்லைன் வணிகர்கள், பெரிய வணிகர்கள், மற்றும் சிறிய ஆஃப்லைன் வணிகர்களுக்கு மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கும் இது பொருந்தும். இருப்பினும், வங்கி மற்றும் ப்பீபெய்ட் வாலட்டுக்கு இடையேயான நபருக்கு நபர் மற்றும் வணிகர் பரிமாற்றங்களுக்கு கூடுதல் கட்டணம் பொருந்தாது.

எரிபொருள் சேலை நிலையங்கள் போன்ற சில வணிகர்கள் UPI மூலம் மேற்கொள்ளப்படும் கட்டணங்களில் 0.5% வரை குறைவான பரிமாற்றக் கட்டணங்களுக்கு தகுதி பெறுவார்கள். அவர்களுக்கான விலை நிர்ணயம் செப்டம்பர் 30 தேதி NPCI மூலம் மதிப்பாய்வு செய்யப்படும்.

இது ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு செலவு அதிகமாகுமா?

பரிமாற்றக் கட்டணம் வணிகர்களால் வாலட்டுகளுக்குச் செலுத்தப்படும், மேலும் இது ₹2,000க்கு அதிகமான பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தும். அதனால், சிறு வியாபாரிகள், கடைக்காரர்கள் இதன் மூலம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. இருப்பினும், வணிகர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும்.

Gold Rate Today : அதிரடியாக உயர்ந்த தங்க விலை.. எவ்வளவு தெரியுமா?

UPI என்பது ‘பொது நலனுக்காக’ என்று அரசாங்கம் நம்புவதால், வங்கியிலிருந்து வங்கிக்கு UPI பரிவர்த்தனைகள் மற்றும் அனைத்து வணிகப் பரிவர்த்தனைகளுக்கும் பரிவர்த்தனை கட்டணம் இருக்க வாய்ப்பில்லை. வாலட் வழங்குபவர்கள் பரிமாற்றக் கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்குச் செலுத்தினால், ₹2,000க்கு மேல் உள்ள UPI பரிவர்த்தனைகளுக்கான வாலட்களை ஏற்றுவதற்கு அதிகச் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!