பட்ஜெட் தாக்கல் எதிரொலி | ஏப்-1 முதல் விலை குறையும் பொருட்கள் எது? விலை உயரும் பொருட்கள் எது?

By Asianet TamilFirst Published Mar 28, 2023, 2:43 PM IST
Highlights

ஏப்ரல் ஒன்று முதல், தங்கம், வைரம், சிகரெட், சில எலக்ட்ரானிக் பொருட்கள் விலை உயரவுள்ளன. டிவி, மொபைல்ஸ், எலக்ட்ரி வாகனங்கள் போன்றவற்றின் விலை குறையவுள்ளன.
 

ஏப்ரல் ஒன்று முதல் புதிய நிதியாண்டு தொடங்க உள்ளது. 2023-2034 பட்ஜெட் தாக்கலின் போது, வைரங்கள், செல்போன் கேமரா லென்ஸ், ரசாயனங்கள் போன்றவற்றின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. மேலும், உள்நாட்டு தொழிலுக்கு ஆதரவாக சில பொருட்களின் இறக்குமதி வரிகளை உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாக, தனியார் விமானம், ஹெல்காப்டர் சேவைகள் விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், உயர்தர எலக்ட்ரானிக்ஸ் பொருடகள், பிளாஸ்டிக் பொருட்கள், நகைகள் அடுத்த மாதம் முதல் விலை உயர உள்ளது. கேமரா லென்கள், ஸ்மார்ட்போன்கள், போன்ற பொருட்களின் விலை குறையும்.

சமையலறை மின்சார புகைபோக்கிகளுக்கான சுங்க வரி 7.5% லிருந்து 15% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், கிட்சன் சிம்னிஸ் போன்றவற்றில் விலை உயர உள்ளது.

விலை உயரும் பொருட்கள்

  • எலக்ட்ரானிக் சிம்னிஸ்
  • நகைகள்
  • இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்
  • சிகரெட்
  • தங்கம்
  • பிளாட்டினம்
  • சில்வர் பொருட்கள்

Breaking : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.15% ஆக உயர்வு!!

விலை குறையும் பொருட்கள்

  • விளையாட்டு பொம்மைகள்
  • மிதிவண்டி
  • டிவி
  • மொபைல்
  • எலக்ட்ரானிக் வாகனம்
  • எல்இடி டிவி
  • கேமரா லென்ஸ்
     
click me!