ஏப்ரல் 1 முதல் ரூ.2000க்கு மேலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கான UPI Wallet கட்டணங்கள் 1.1% வசூலிக்கப்படும் என்று தகவல் வெளியாகியது.
நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் யுபிஐ பரிவர்த்தனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நடைபாதை வியாபாரிகள், சிறு கடைகள், தள்ளுவண்டி வியாபாரிகள் என பல தரப்பினரும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மாறிவிட்டனர்.
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பதற்கு தேசிய பரிவர்த்தனை கழகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, உங்கள் மொபைல் வாலட்டில் (Mobile Wallet) இருந்து வியாபாரிகளுக்கு பணம் செலுத்தினால் அதற்கு 1.1% கட்டணம் வசூலிக்க தேசிய பரிவர்த்தனை கழகம் முடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது.
இதையும் படிங்க..ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ
அதுவும் இந்த திட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் என்பிசிஐ சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. 1.1 சதவீத பரிமாற்றக் கட்டணம் வாடிக்கையாளருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், யுபிஐ பரிவர்த்தனைகள் இலவசமாக இருக்கும் என்றும் விளக்கியுள்ளது.
வங்கிக் கணக்கு மற்றும் பிபிஐ ஆகியவற்றுக்கு இடையேயான பியர்-2-பியர் (பி2பி) மற்றும் பியர்-2-மெர்ச்சண்ட் (பி2எம்) பரிவர்த்தனைகளுக்கு பரிமாற்றக் கட்டணம் தேவையில்லை. அதாவது, நீங்கள் உங்கள் மொபைல் வாலட்டில் இருந்து ஒரு வியாபாரிக்கு 2000 ரூபாய்க்கு மேல் யுபிஐ வழியாக பணம் செலுத்தும்போது, அந்த வியாபாரியிடம் இருந்து 1.1% கட்டணம் வசூலிக்கப்படுமே தவிர பணம் செலுத்தும் வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலிக்கப்படாது.
பேடிஎம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “இன்டர்சேஞ்ச் கட்டணங்கள் மற்றும் வாலட் இயங்குதன்மை குறித்த NPCI சுற்றறிக்கை குறித்து, எந்த வாடிக்கையாளரும் UPIயிலிருந்து வங்கிக் கணக்கு அல்லது PPI/Paytm Wallet இல் பணம் செலுத்துவதற்கு எந்த கட்டணத்தையும் செலுத்த மாட்டார்கள். யாரும் பயப்பட தேவையில்லை. வாடிக்கையாளர் எந்தவொரு கட்டணத்தை செலுத்த தேவையில்லை என்றும் விளக்கமளித்துள்ளனர்.
இதையும் படிங்க..2வது திருமணம்.. குறுக்கே வந்த கள்ளக்காதலன்.. உல்லாசமாக இருந்த மனைவி - எதிர்பாராத ட்விஸ்ட்