திருமணத்தின் மூலம் ஒரே மாதத்தில் நாட்டில் 3.75 லட்சம் கோடிக்கு வர்த்தகம் எதிர்பார்ப்பு; புதிய ஆய்வில் தகவல்!!

By Dhanalakshmi GFirst Published Nov 7, 2022, 5:27 PM IST
Highlights

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பெரிய அளவில் மக்கள் தீபாவளி போன்ற பண்டிகைகளை கொண்டாட முடியாமல் இருந்தனர். இதனால் திருமணங்களும் தடைபட்டன. பலரும் ஆடம்பரம் இல்லாமல், சில உறவினர்கள் மட்டுமே பங்கேற்க திருமணத்தை நடத்தி முடித்தனர். நடப்பாண்டில், தொற்று முற்றிலும் நீங்காவிட்டாலும் அச்சுறுத்தல் இல்லாமல் உள்ளது. இதனால் மக்கள் ஒவ்வொரு பண்டிகைகளையும், திருமணத்தையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்தில் முடிந்த தீபாவளி பண்டிகையும் இந்தியா முழுவதும் விமர்சையாக மக்களால் கொண்டாடப்பட்டது. இது, வர்த்தகர்களுக்கு சாதகமாக இருந்தது. இதேபோன்று வரும் நவம்பர் 14ஆம் தேதி முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை திருமண வைபவங்கள் நடைபெறும் கால கட்டம் என்பதால், வர்த்தகம் ஜோராக இருக்கும் என்று சிஏஐடி ஆராய்ச்சி மற்றும் வர்த்தக வளர்ச்சி சொசைட்டி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.  

சிஏஐடி ஆராய்ச்சி மற்றும் வர்த்தக வளர்ச்சி சொசைட்டி ஆய்வின்படி, நவம்பர் 14ஆம் தேதி முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் மொத்தம் 32 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது. மேலும், இதன் மூலம் 3.75 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளது. திருமணத்திற்காக வாங்கப்படும் பொருட்கள் மற்றும் அது சார்ந்த பல்வேறு வர்த்தகங்களின் மூலம் வர்த்தகம் நடைபெறும் என்று கணித்துள்ளது.

SBI Share price: உச்சம் தொட்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI) வங்கிப் பங்குகள்:வரலாற்று லாபம்! % வரை உயர்ந்தது

சிஏஐடி நடத்திய ஆய்வில், 5 லட்சம் திருமணங்கள் தலா 3 லட்சம் ரூபாய் செலவிலும், 10 லட்சம் திருமணங்கள் தலா 5 லட்சம் ரூபாய் செலவிலும், 10 லட்சம் திருமணங்கள் 10 லட்சம் ரூபாய் செலவிலும், 5 லட்சம் திருமணங்கள் 25 லட்சம் ரூபாய் செலவிலும், 50,000 திருமணங்கள் 50 லட்சம் ரூபாய் செலவிலும், 50 திருமணங்கள் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான செலவிலும் நடத்தப்படலாம் என்று கணித்துள்ளது. 

இந்த திருமணங்கள் மூலம் சந்தையில் ரூ, 3.75 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது. இந்த திருமண சீசனை அடுத்து, 2023 ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜூலை வரை திருமண சீசன் களைகட்டும். 

எதிர்கொண்டு இருக்கும் திருமண சீசனில் டெல்லியில் மட்டும் 3.5 லட்சம் திருமணங்கள் நடக்கலாம் என்றும், இதன் மூலம் 75,000 கோடி சந்தையில் புரள இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு இதே கால கட்டத்தில், 25 லட்சம் திருமணங்கள் நடந்து இருந்தது. இதன்மூலம் 3 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக சிஏஐடி தெரிவித்துள்ளது.

Share Market Today: குஷி! பங்குச்சந்தையில் காளை முகம்! சென்செக்ஸ், நிப்டி ஏற்றம்: வங்கி, உலோகப் பங்குகள் ஜோர்!

மேலும் இந்த திருமணங்களில் செய்யும் செலவுகளில் 20 சதவீதம் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாருக்கு செல்கிறது என்பதையும் மீதமுள்ள 80 சதவீதம்தான் மூன்றாம் தர முகவர்களுக்கு செல்கிறது என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. பெரும்பாலானவர்கள் திருமணத்திற்கு முன்பு தங்களது வீடுகளில் பெரிய அளவில் முதலீடு செய்கின்றனர். இதுதவிர, நகைகள், புடவைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள், காலணிகள், பத்திரிகைகள், பூக்கள், பழங்கள், இனிப்புகள், பல சரக்கு சாமான்கள், அலங்காரப் பொருட்கள் என்று திருமணத்திற்கான பட்டியலும் நீள்கிறது. இதன் மூலம் வர்த்தகத்தில் ஈடுபட்டு இருக்கும் பெரும்பாலானவர்கள் பயன் அடைகின்றனர் என்ற ஆய்வு முடிவையும் கொடுத்துள்ளது.

click me!