வாரத்தின் முதல்நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்தது. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை முடித்தன.
வாரத்தின் முதல்நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்தது. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை முடித்தன.
சர்வதேச சூழல் சாதகமாக இருந்தது, அமெரிக்காவின் வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள் சாதகம், சீனாவில் கொரோனா தாக்கம்குறைந்து பொருளாதாரம் நடவடிக்கை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியம் ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை அடைந்தனர்.
Bank Holiday in November: நவம்பர் 2வது வாரத்தில் வங்கிகளுக்கு 4 நாட்கள் விடுமுறையா?
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 2வது காலாண்டில் ரூ,13,265 கோடி லாபம் ஈட்டியுள்ளது, கடந்த ஆண்டைவிட 74 சதவீதம் அதிகமாகும். அதிகமான கடன்கள் அளித்தது, அதிகமான வட்டி போன்றவை லாபத்துக்கு முக்கிய காரணம். இதனால் வங்கித்துறை பங்குகளில் எஸ்பிஐ வங்கிப் பங்கு அதிக லாபத்துடன் நகர்ந்தது.
இதனால் காலையில் வர்த்தகம் தொடங்கியதும், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 300 புள்ளிகளும், தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 107 புள்ளிகளும் உயர்ந்தன. முதலீட்டாளர்களுக்கு காலையில் இருந்த உற்சாகம் மாலைவரை நீடித்ததால் ஆர்வத்துடன் பங்குகளை கைமாற்றியதால், வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்தது.
60 நாட்கள் கெடு!அமெரிக்காவில் ட்விட்டர் பணியிலிருந்து நீக்கப்பட்ட இந்தியர்களுக்குச் சிக்கல்
வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 234 புள்ளிகள் உயர்ந்து, 61,185 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 82 புள்ளிகள் அதிகரித்து, 18,199 புள்ளிகளில் வர்த்தகத்தை உயர்வுடன் முடித்தது.
மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் 11 நிறுவனப் பங்குகள் சரிவில் முடிந்தன, மற்ற 19 நிறுவனப்ப பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன. குறிப்பாக எஸ்பிஐ, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட், மாருதி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, ஹெச்டிஎப்சி டிவின்ஸ், பார்தி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, டிசிஎஸ், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் லாபத்தில் முடிந்தன. குறிப்பாக எஸ்பிஐ வங்குகள் அதிகபட்சமாக 5 சதவீதம் வரை உயர்ந்து, 3 சதவீதத்தில் முடிந்தன.
மாறாக, இன்போசிஸ், பஜாஜ் பைனான்ஸ், லார்சன்அன்ட்டூப்ரோ, கோடக் மகிந்திரா, என்டிபிசி, டைட்டன், பஜாஜ்பின்சர்வ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் மதிப்புகுறைந்தன.
தங்கம் விலை தொடர் உயர்வு! நடுத்தரக் குடும்பத்து மக்கள் கலக்கம்: இன்றைய நிலவரம் என்ன?
நிப்டியில் பொதுத்துறை பங்குகள் 4.5 சதவீதம் வரை உயர்ந்தன. உலோகம் 1.6%, ஆட்டோமொபைல் பங்குகள் 1.3% ஆகியவை ஏற்றம் கண்டன. மருந்துத்துறை வங்குகள் 1.4% சரிந்தன.