Bank Holiday in November: நவம்பர் 2வது வாரத்தில் வங்கிகளுக்கு 4 நாட்கள் விடுமுறையா?

By Pothy Raj  |  First Published Nov 7, 2022, 2:35 PM IST

நவம்பர் 2வது வாரத்தில் வங்கிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை காத்திருக்கிறது. குருநானக் ஜெயந்தி உள்ளிட்ட விஷேச நாட்களுக்கு பல்வேறு மாநிலங்களில் விடுமுறை விடப்படுகிறது 


நவம்பர் 2வது வாரத்தில் வங்கிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை காத்திருக்கிறது. குருநானக் ஜெயந்தி உள்ளிட்ட விஷேச நாட்களுக்கு பல்வேறு மாநிலங்களில் விடுமுறை விடப்படுகிறது

நவம்பர் மாதத்தில் பெரும்பாலும் அரசு பொதுவிடுமுறை நாட்கள் இல்லை. ஆனால், 2வது வாரத்தில் சில பண்டிகை நாட்கள் வருகின்றன. இந்த விஷேச நாட்களுக்கு சிலமாநிலங்களில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. மற்ற வங்கிகளுக்கு இல்லை.

Tap to resize

Latest Videos

உச்சம் தொட்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI) வங்கிப் பங்குகள்:வரலாற்று லாபம்! % வரை உயர்ந்தது

அந்த வகையில் குருநானக் ஜெயந்தி, குருபுரூப் ஆகியவை நாளை(8ம்தேதி) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை பெரும்பாலும் பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட சீக்கியர்கள் அதிகமாக வசிக்கும் மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், அஜாவால், பெலாபூர், புவனேஷ்வர், போபால், டேராடூன், சண்டிகர், ஹைதராபாத், ஜம்மு, கான்பூர், ஜெய்பூர், கொல்கத்தா, லக்னோ, நாக்பூர், புதுடெல்லி, மும்பை, ராய்பூர், ஷிம்லா, ராஞ்சி, ஸ்ரீநகர் ஆகியவற்றில் விடுமுறைவிடப்படுகிறது.

:60 நாட்கள் கெடு!அமெரிக்காவில் ட்விட்டர் பணியிலிருந்து நீக்கப்பட்ட இந்தியர்களுக்குச் சிக்கல்

வரும் 11ம் தேதி(வெள்ளிக்கிழமை) கனகாதாசா ஜெயந்தி அல்லது வங்களா பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது ஷில்லாங், பெங்களூருவில் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது

நவம்பர் 12ம்தேதி 2வது சனிக்கிழமை, நவம்பர் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், விடுமுறை. ஆக, வங்கிகளுக்கு இந்த வாரத்தில் 4 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. 

ட்விட்டரைத் தொடர்ந்து பேஸ்புக்கின் மெட்டா நிறுவனமும் ‘மெகா ஆட்குறைப்பில்’ இறங்குகிறது

இது தவிர வரும் 23ம் தேதி மேகாலயாவில் செங் குட்ஸ்நெம் அல்லது செங் குட் ஸ்நெம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக அங்கு வங்கிகள் விடுமுறை விடப்படுகின்றன.
 

click me!