வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ.400க்கு மேல் அதிகரித்த நிலையில் தொடர்ந்து விலை உயர்ந்துள்ளது
வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ.400க்கு மேல் அதிகரித்த நிலையில் தொடர்ந்து விலை உயர்ந்துள்ளது
தங்கம் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாயும், சவரனுக்கு 40 ரூபாயும் ஏற்றம் கண்டுள்ளது.
எகிறியது தங்கம் விலை!சவரனுக்கு ரூ400க்கு மேல்உயர்வு!வெள்ளியும் விர்ர்ர்! இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,770 ஆகவும், சவரன், ரூ.38,160 ஆகவும் இருந்தது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(திங்கள்கிழமை) கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ரூ.4,775 ஆகவும், சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து, ரூ.38 ஆயிரத்து 200 ஆகவும் உயர்ந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,775க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை தொடர் சரிவு! 2 நாட்களில் சவரனுக்கு ரூ.280 வீழ்ச்சி:இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலையில் கடந்த வாரம் ஊசலாட்டம் இருந்தபோதிலும் பெரிதாக விலை குறையவில்லை. கடந்த வாரத்தில் கிராம் ரூ.4715 என்ற விலையில் தொடங்கி, கிராமுக்கு ரூ.55 அதிகரித்த நிலையில் வர்த்தகம் முடிந்தது. இந்த வாரத் தொடங்கத்திலும் தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நடுத்தரக் குடும்பத்து மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து ஏற்றத்துடன் நகர்வது, சர்வதேசச் சந்தை சூழல் சாதகமாக இருப்பதால், தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
தங்கம் விலை அதிரடி குறைவு! சவரனுக்கு 200 ரூபாய்க்கு மேல் சரிவு! இன்றைய நிலவரம் என்ன
வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. வெள்ளி கிராம் ரூ.66.30 ஆகவும், கிலோ ரூ.66,300 ஆகவும் நிலையாக உள்ளது