Meta Layoffs 2022: ட்விட்டரைத் தொடர்ந்து பேஸ்புக்கின் மெட்டா நிறுவனமும் ‘மெகா ஆட்குறைப்பில்’ இறங்குகிறது

By Pothy RajFirst Published Nov 7, 2022, 8:57 AM IST
Highlights

எலான் மஸ்க்கின் ட்விட்டர் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியதைத் தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனமும் ஏராளமான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

எலான் மஸ்க்கின் ட்விட்டர் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியதைத் தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனமும் ஏராளமான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

இந்த மெகா ஆட்குறைப்பு நடவடிக்கை இந்த வாரத்தில் இருக்கலாம் என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மெகா ஆட்குறைப்பால் பேஸ்புக்கில் பணியாற்றும் ஆயிரக்கணக்காண ஊழியர்கள்  பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

மசால் தோசை, பில்டர் காபியில் மயங்கிய ஸ்டார்பக்ஸ் இணை நிறுவனர்: பெங்களூரு வித்யார்த்தி பவன் பெருமை

ஆனால், இந்த விவகாரம் குறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளேடு செய்தி வெளியிட்ட நிலையலி் அதுகுறித்து மெட்டா நிறுவனத்திடம் கருத்துக் கேட்டபோது, பதில் அளிக்க மறுத்துவிட்டது.

பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா கடந்த அக்டோபர் மாதம் விடுத்த அறிவிப்பில், “ எதிர்வரும் காலாண்டு மிகவும் மந்தமாக இருக்கும், அடுத்த ஆண்டில் 6700 கோடி டாலர் பங்குச்சந்தையிலிருந்து குறையக்கூடும் ஏற்கெனவே இந்த ஆண்டு 50ஆயிரம் கோடி டாலரை இழந்துவிட்டோம்.

இந்தியாவின் ட்விட்டர் நிறுவனத்தில் அனைத்து ஊழியர்களும் நீக்கம்: மார்க்கெட்டிங் டீமே காலி!

உலகளவில் மந்தமாகிவரும் பொருளாதார வளர்ச்சி, டிக்டாக் செயலியின் கடும்போட்டி, ஆப்பிள் நிறுவனத்தின் மாற்றங்கள் ஆகியவற்றால் மெட்டாவெர்ஸுக்கு அதிகமான செலவு செய்ய வேண்டியுள்ளது” எனத் தெரிவித்திருந்தது

பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் கூறுகையில் “ மெட்டாவெர்ஸில் செய்யப்பட்ட முதலீட்டில் இருந்து பலனை அறுவரை செய்ய 10 ஆண்டுகள் வரைகூட ஆகலாம். அதனால்தான் ஆட்களை வேலைக்கு எடுப்பதை நிறுத்தியுள்ளோம், திட்டங்களைக் குறைத்துள்ளோம், குழுவினருக்கு செலவிடும் தொகையும் குறைத்துவிட்டோம். 

2023ம் ஆண்டில் அதிகமான வளர்ச்சியிருக்கும் சிறிய அளவிலான திட்டங்களுக்கு மட்டும்தான் முன்னுரிமை கொடுத்து செலவிடவோம். சில குழுக்கள் அர்த்தமுள்ளதாக, ஆக்கப்பூர்வமாக வளரலாம், சில குழுக்கள் வளராமல் தேக்கமடையலாம், அல்லது சுருக்கப்படலாம். 2023ம் ஆண்டில் பேஸ்புக் இதேபோன்றுதான் இருக்கும், தேவைப்பட்டால் சிறிது சுருக்கப்படலாம்” என கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்திருந்தார்.

மேதாந்தா மருத்துவமனையில் குளோபல் ஹெல்த் ஐபிஓ வெளியீடு: ஒரு பங்கு விலை என்ன, முழுவிவரம்

பேஸ்புக் நிறுவனத்துக்கு மென்பொறியாளர்களை வேலைக்கு எடுப்பதை 30% குறைக்க இருப்பதாகவும் கடந்த ஜூன் மாதம் ஜூகர்பெர்க் தெரிவித்திருந்தார். 

மெட்டாவின் பங்குதாரரான அல்டிமீட்டர் கேபிடல் மேனேஜ்மென்ட், மார்க் ஜூகர்பெர்கிற்கு சமீபத்தில் கடிதம் எழுதி அதை வெளியிட்டிருந்தது. அதில் “ பேஸ்புக் நிறுவனம் வேலைக்கு ஆட்களை எடுப்பதை ஒழுங்குபடுத்த வேண்டும், முதலீட்டு செலவிலும்கவனம் தேவை. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மெட்டா இழந்து வருகிறது. மெட்டாவெர்ஸுக்கு செலவு அதிகரிக்கிறது” எனத் தெரிவித்திருந்தது

பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்ட், ட்விட்டர், ஸ்நாப் இன் ஆகியவை, கடந்த சில மாதங்களாக ஆட்குறைப்பில் ஈடுபடத் தொடங்கிவிட்டன. உலகளவில் மந்தமான பொருளாதார நிலை, வட்டிவீதம் உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு, ஐரோப்பாவில் எரிபொருள் விலை உயர்வு போன்றவை காரணமாகக் கூறப்படுகிறது
 

click me!