நவம்பர் மாதத்தில் ஹோண்டா நிறுவனம், தனது ஜாஸ், அமேஸ், சிட்டி, டபிள்யுஆர்-வி ரக கார்களுக்கு ஏராளமான சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வழங்கியுள்ளது.
நவம்பர் மாதத்தில் ஹோண்டா நிறுவனம், தனது ஜாஸ், அமேஸ், சிட்டி, டபிள்யுஆர்-வி ரக கார்களுக்கு ஏராளமான சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வழங்கியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை 18சதவீதம் அதிகரித்திருந்தது. அதைத் தக்கவைக்கும் நோக்கில் நவம்பரிலும் தள்ளுபடியையும், சலுகைகளையும் ஹோண்டா நிறுவனம் நீட்டித்துள்ளது.
ட்விட்டர் ஊழியர்களை நீக்கியது சரியா?அமெரிக்க சட்டம் சொல்வது என்ன? மஸ்க் மீது வழக்கு
ஹோண்டா நிறுவனங்களில் அதிகமாக விற்பனையாகும் அமேஸ் ரக கார்களுக்கு தொடர்ந்து தள்ளுபடி அளித்துள்ளது.
ஹோண்டா அமேஸ்(Honda Amaze)
ஹோண்டா அமேஸ் கார்களுக்கு ரூ.19,896 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ரொக்கத் தள்ளுபடியாக ரூ.10ஆயிரம் அல்லது உதரி பாகங்கள் வாரியாக ரூ.11,896 தள்ளுபடி தரப்படும். வாடிக்கையாளர் லாயல்டி போனஸாக ரூ.5ஆயிரம், கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூ.3ஆயிரம் தரப்படும்.
சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் இமாச்சலில் 106 வயதில் காலமானார்: 34-வது முறை வாக்களித்தார்!
ஹோண்டா சிட்டி(Honda City 5வது தலைமுறை)
ஹோண்டா சிட்டி 5ஜெனரேஷன் ரக கார்களுக்கு ரூ.59,292 வரை தள்ளுபடிதரப்படுகிறது. இதில் பெட்ரோல், டீசல் வேரியன்ட் கார்களுக்கும், சிவிடி வேரியன்ட்களுக்கும் இந்தத் தள்ளுபடி பொருந்தும்.
பெட்ரோல் கார்களுக்கு ரூ.30ஆயிரம் வரையிலும் அல்லது உதரி பாகங்களுக்கு ரூ.32,392 வரையிலும்தள்ளுபடி தரப்படும். கார் எக்சேஞ்ச் விலையில் ரூ.10ஆயிரம், வாடிக்கையாளர் லாயல்டி போனஸ் ரூ.5ஆயிரம், கார் எக்சேஞ்ச் போனஸ் ரூ.7ஆயிரம், கார்ப்பரேட் போனஸ் ரூ.5ஆயிரம் வழங்கப்படும்.
பெட்ரோல் சிவிடி வகை கார்களுக்கு எக்சேஞ்ச் போனசாக ரூ.20ஆயிரம், வாடிக்கையாளர் லாயல்டி போனஸ் ரூ.5ஆயிரம், கார் எச்சேஞ்ச் போனஸ் ரூ.7ஆயிரம் , கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் ரூ.5ஆயிரம் தரப்படுகிறது
ஹோண்டா WR-V(Honda WR-V)
ஹோண்டா WR-V கார்களுக்கு ரூ.63 ஆயிரம் வரை தள்ளுபடி தரப்படுகிறது. இதில் கேஷ் டிஸ்கவுண்ட் ரூ.30ஆயிரம் அல்லது உதரி பாகங்களுக்கு ரூ.36,144, கார் எக்சேஞ்ச் தள்ளுபடியாக ரூ.10ஆயிரம், வாடிக்கையாளர் போனஸாக ரூ.5ஆயிரம், கார் எக்சேஞ்ச் போனஸா ரூ.7ஆயிரம், கார்ப்பரேட் போனஸாக ரூ.5ஆயிரம் வழங்கப்படும்.
ஹோண்டா ஜாஸ்(Honda Jazz)
ஹோண்டா ஜாஸ் ரக கார்களுக்கு ரூ.25 ஆயிரம்வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து வகை பெட்ரோல் வேரியன்ட்களுக்கும் இது பொருந்தும். கார் எக்சேஞ்ச் தள்ளுபடியாக ரூ.10ஆயிரம், வாடிக்கையாளர் போனஸாக ரூ.5ஆயிரம், கார் எக்சேஞ்ச் போனஸாக ரூ.7ஆயிரம், கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூ.3ஆயிரம் வழங்கப்படுகிறது