இந்தியாவின் ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து ஏறக்குறைய அனைத்து ஊழியர்களையும் பணியிலிருந்து நீக்கி டெஸ்லா நிறுவனரும், ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்தியாவின் ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து ஏறக்குறைய அனைத்து ஊழியர்களையும் பணியிலிருந்து நீக்கி டெஸ்லா நிறுவனரும், ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க் நடவடிக்கை எடுத்துள்ளார்.
குறிப்பாக இந்தியாவின் ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள பொறியியல் பிரிவு, விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு, தகவல்தொடர்புத்துறை ஆகியவற்றில் உள்ள பெரும்பாலான ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். இந்த எண்ணிக்கை 200 ஊழியர்களுக்கு மேல் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்ணீருடன் வெளியேறும் ட்விட்டர் இந்தியா ஊழியர்கள்: எலான் மஸ்க் மெயிலுக்காக காத்திருப்பு!
இந்தியாவின் ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து ஒட்டுமொத்த ஊழியர்களும் நீக்கப்பட்டனரா என்று அதிகாரபூர்வாக ட்விட்டர் நிறுவனம் தெரிவிக்கவில்லை. அதேநேரம், நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு என்னவிதமான இழப்பீடு வழங்கப்படும் என்பது குறித்த தகவலும் இல்லை.
இந்தியா ட்விட்டர் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் டீமில் இருந்த அனைத்து ஊழியர்களும் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளனர்.
ட்விட்டர் நிறுவனத்தை 40 ஆயிரம் கோடி டாலருக்கு எலான் மஸ்க் வாங்கியிருந்தார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியபின் எலான் மஸ்க் பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தும், சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஊழியர்களையும் நீக்கி வருகிறார்.
Twitter நிறுவனத்தில் 4 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தாரா எலான் மஸ்க்?
மூத்த அதிகாரிகளான சிஇஓ பராக் அகர்வால், நிதித்துறை தலைவர் நெட் செகல், மூத்த சட்ட அதிகாரி விஜயா கடே, சீன் எட்ஜெட் ஆகியோரையும் தலைமை சந்தைத் தொடர்பு அதிகாரி லெஸ்ஸி பெர்லாண்ட், வாடிக்கையாளர் தொடர்பு தலைமை அதிகாரி சாரா பெர்சனோட், ஜீன் பிலிப் ஆகியோரையும் எலான் மஸ்க் பணி நீக்கம் செய்தார். செலவைக் குறைக்கும் நோக்கில், ட்விட்டரில் பணியாற்றிய 7500 ஊழியர்களில், 3ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க எலான் மஸ்க் முடிவு செய்து மின்அஞ்சல்களை அனுப்பும் நடவடிக்கையை எடுத்தார்.
இதில் இந்தியாவில் உள்ள ட்விட்டர் நிறுவன ஊழியர்களும் தப்பவில்லை. இந்தியாவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தில் 250ஊழியர்கள் வரை வேலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஏறக்குறைய அனைத்து ஊழியர்களும் நீக்கப்பட்டு அதற்கான மின்அஞ்சல்கள் 4ம் தேதி அனுப்பிவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
ட்விட்டரில் ப்ளூ டிக் வாங்கியிருக்கிங்களா! கவனம்! இதைப் படிக்க மறக்காதிங்க
இந்தியாவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவு, பொறியியல், விற்பனை, தகவல் தொடர்பு ஆகியவற்றில் பணியாற்றிய 95 சதவீத ஊழியர்கள் நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் நிர்வாகம் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்அஞ்சலில், “ வேலைநீக்கம் குறித்த மின்அஞ்சல்கள் 4ம் தேதி மாலைக்குள் அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு வராவிட்டால் மின்அஞ்சலில் உள்ள ஸ்பாம் போல்டரில் பார்க்கவும். அதிலும் வரலாவிட்டால்,peoplequestions@twitter.com என்ற மின்அஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்” எனத் தெரிவி்த்திருந்தது.
அதுமட்டுமல்லாமல் “ வேலைக்காக அலுவலகம் வந்து கொண்டிருந்தால், அல்லது அலுவலகத்தில் இருந்தால் தயவு செய்து வீட்டுக்குச் சென்றுவிடவும்”எனவும் தெரிவிக்கப்பட்டு மின்அஞ்சல்அனுப்பப்பட்டது.
ட்விட்டர் நிறுவன ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வேலையிலிருந்து நீக்கம்: எலான் மஸ்க் திட்டம்
ஆனால், ட்விட்டரில் இருந்து மின்அஞ்சல் வருவதற்கு முன்பாகவே இந்தியாவில் உள்ள பல ஊழியர்கள் தங்கள் வேலைபறிபோகும் என்று எண்ணி தாங்களாகவே வேலையிலிருந்து விலகி, ராஜினாமாகடிதம் கொடுத்துச் சென்றனர்.
இதற்கிடையே ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து 3700 ஊழியர்களை எந்தவிதமான முன்அறிவிப்பின்றி எலான் மஸ்க் நீக்கியுள்ளார். இது பெடரல் மற்றும் கலிபோர்னியா சட்டத்துக்கு எதிரானதாகும். எலான் மஸ்க் நடவடிக்கைக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை சான்பிரான்சிஸ்கோ பெடரல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.