தங்கம் விலையில் ஒரே நாளில் கிடுகிடு மாற்றம் ஏற்பட்டுள்ளது. சவரனுக்கு ரூ.400 மேல் உயர்ந்து, ரூ.38ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது
தங்கம் விலையில் ஒரே நாளில் கிடுகிடு மாற்றம் ஏற்பட்டுள்ளது. சவரனுக்கு ரூ.400 மேல் உயர்ந்து, ரூ.38ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது
தங்கம் விலை இன்று கிராமுக்கு 53 ரூபாயும், சவரனுக்கு 424ரூபாயும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை தொடர் சரிவு! 2 நாட்களில் சவரனுக்கு ரூ.280 வீழ்ச்சி:இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,717 ஆகவும், சவரன், ரூ.37,736 ஆகவும் இருந்தது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(சனிக்கிழமை) கிராமுக்கு 53 ரூபாய் உயர்ந்து ரூ.4,770 ஆகவும், சவரனுக்கு 424 ரூபாய் அதிகரித்து, ரூ.38 ஆயிரத்து 160 ஆகவும் ஏற்றம் கண்டது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,770க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை அதிரடி குறைவு! சவரனுக்கு 200 ரூபாய்க்கு மேல் சரிவு! இன்றைய நிலவரம் என்ன
தீபாவளிக்குப்பின் தங்கம் விலையில் கடும் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. இந்த வாரத் தொடக்கத்தில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்த நிலையில், அடுத்த இரு நாட்களில் ரூ.280 குறைந்தது. ஆனால், இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.424 அதிகரித்துள்ளது.
கடந்த இரு நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்ததால் மேலும் குறையும் என்று நகைப்பிரியர்கள் எண்ணி இருந்தார்கள். ஆனால், இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400க்கு மேல் அதிகரித்து, மீண்டும் ரூ.38ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தங்கம் விலையில் என்ன மாற்றம்? இன்றைய நிலவரம் என்ன?
வெள்ளி விலையும் திடீரென அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் 90 பைசா உயர்ந்து, ரூ.66.30 ஆகவும், கிலோவுக்கு ரூ.1,900 அதிகரித்து, ரூ.66,300 ஆகவும் ஏற்றம் கண்டுள்ளது