Starbucks: மசால் தோசை, பில்டர் காபியில் மயங்கிய ஸ்டார்பக்ஸ் இணை நிறுவனர்: பெங்களூரு வித்யார்த்தி பவன் பெருமை

By Pothy Raj  |  First Published Nov 5, 2022, 12:04 PM IST

பெங்களூருக்கு வந்திருந்த ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தின் இணை நிறுவனரான செவ் சீகல், பிரபலமான ஹோட்டலான வி்த்யார்த்தி பவனில் மசால் தோசை, பில்டர் காபி குடித்து பாராட்டிவிட்டு சென்றார்.


பெங்களூருக்கு வந்திருந்த ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தின் இணை நிறுவனரான செவ் சீகல், பிரபலமான ஹோட்டலான வி்த்யார்த்தி பவனில் மசால் தோசை, பில்டர் காபி குடித்து பாராட்டிவிட்டு சென்றார்.

பெங்களூரு நகரில் புகழ்பெற்ற வித்யார்த்தி பவன் எனும் ஹோட்டல் உள்ளது. கடந்த 1944ம் ஆண்டு வெங்கட்ரமணா உரல் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த ஹோல்டல் பள்ளி மாணவர்களுக்கு குறைந்தவிலையில் உணவு வழங்கியது. அதன்பின் கடந்த 1970களில் ராமகிருஷ்ணா அடிகா என்பவர் வித்யார்த்தி பவனை விலைக்கு வாங்கினார்.

Tap to resize

Latest Videos

அதன்பின் இந்த ஹோட்டலில் விற்பனை செய்யப்பட்ட பட்டர் தோசை, மசால் தோசை, பூரி செகு, ரவா வடை, ரவா தோசை, பில்டர் காபி போன்றவை புகழ்பெறத் தொடங்கின. இந்த ஹோட்டலில் சாப்பிடுவதற்கு கூட்டமும் அலைமோதியது.

ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ஏன் பணவீக்கம் குறி்த்து விளக்க அறிக்கை அனுப்பியது? ஓர் அலசல்

சினிமா பிரபலங்கள், கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வித்யார்த்தி பவனில் சாப்பிட்டு தங்கள் கருத்தைதெரிவிக்க மேலும் பரபலமடைந்தது. பல விஐபிக்கள், சினிமா நட்சத்திரங்கள், அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் சந்தித்து பேசும் முக்கிய இடமாகவும் வித்யார்த்தி பவன் மாறியது. சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், வித்யார்த்தி பவனில் சாப்பிடும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதன்பின் வித்யார்த்தி பவன் பெயர் வைரலானது.

இந்நிலையில் பெங்களூருவில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சில நாட்களுக்கு முன் நடந்தது. இந்த மாநாட்டில் சர்வதேச காபிசெயின் நிறுவனமான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் செவ் சீகல் பங்கேற்றார். பெங்களூருவுக்கு வந்திருந்த செவ் சீகல், வித்யார்த்தி பவனுக்கும் செல்லத் தவறவில்லை.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் ஆர்பிஐ தோல்வி:மத்திய அரசுக்கு விளக்கமளிக்கிறார்சக்திகாந்த தாஸ்
வித்யார்த்தி பவனுக்குச் சென்ற செவ் சீகல், மசால் தோசை சாப்பிட்டு அதன் ருசியில் மயங்கினார், அதுமட்டுமில்லாமல் பில்டர் காபியையும் ருசித்து சுவைத்துக் குடித்தார். அங்கிருந்து செல்லும்போது, வித்யார்த்தி பவனுக்கு 3 ஸ்டார்கள் ரேங்க் அளித்து செவ் சீகல் சென்றார். 

செவ் சீகல் வாடிக்கையாளர் புத்தகத்தில் எழுதிய குறிப்பில் “ நண்பர்களே, உங்களின் புகழ்பெற்ற உணவையும், காபியையும் சாப்பிட்டு, உங்களின் வரவேற்பைப் பெற்றது எனக்கு மிகப்பெருமை. எனக்கு கிடைத்த மிகச்சிறந்த அனுபவத்தை என்னுடன் சீட்டல் நகருக்கு கொண்டு செல்வேன்” எனத் தெரிவித்திருந்தார்

ட்விட்டர் நிறுவன ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வேலையிலிருந்து நீக்கம்: எலான் மஸ்க் திட்டம்

 

வித்யார்த்தி பவனின் உரிமையாளரான அருணா அடிகா கூறுகையில் “ முக்கிய விஐபிக்கள் எங்கள் ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்டுச் செல்வது எனக்கு பெருமையாக இருக்கிறது, சர்வதேச அங்கீகாரம் கிடைக்கிறது. செவ் சீகல் எங்கள் ஹோட்டலுக்கு வந்திருந்து மசால்தோசை, ரவா இட்லி, உப்மா, கேசரி பாட், பில்டர் காபியை சுவைத்தார்” எனத் தெரிவித்தார்

click me!