ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2024ன் படி, ஆசியாவின் 'கோடீஸ்வர தலைநகரமாக' மும்பை உருவெடுத்துள்ளது. மும்பையில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இது இந்தியாவின் பொருளாதார வலிமையை எடுத்துக்காட்டுகிறது.
ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2024 நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி இந்தியாவின் நிதி மையமாக இருக்கும் மும்பை, சீனாவின் பெய்ஜிங்கை முந்தி ஆசியாவின் 'கோடீஸ்வர தலைநகரமாக' உருவெடுத்துள்ளது. இந்த பட்டியல் மும்பையில் அதிகரித்து வரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையை எடுத்துக்காட்டுகிறது. உண்மையில், பட்டியலில் உள்ள அனைத்து கோடீஸ்வரர்களிலும் 25% பேர் மும்பையில் உள்ளனர், இது ஆசியாவின் பணக்கார நகரமாக மட்டுமல்லாமல், இந்தியாவின் பணக்காரர்களின் சிறந்த தேர்வாகவும் உள்ளது. மும்பைக்கு அடுத்தபடியாக புது டெல்லி மற்றும் ஹைதராபாத் கோடீஸ்வர தலைநகரமாக இடம்பிடித்துள்ளது.
மும்பையின் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. கடந்த ஆண்டில் 58 புதிய கோடீஸ்வரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் மும்பை மிகப்பெரிய கோடீஸ்வர நகரமாக உருவெடுத்துள்ளது. மும்பையைத் தொடர்ந்து, புது டெல்லியிலும் கோடீஸ்வரர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டெல்லியில் மேலும் 18 புதிய கோடீஸ்வரர்கள் இணைந்துள்ளனர். அதன்படி, கோடீஸ்வரர்களின் நிகர அதிகரிப்பில் இந்தியா சீனாவை விஞ்சியுள்ளது என்றும் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
undefined
5 நாட்களுக்கு ஒரு பில்லினியரை உருவாக்கும் இந்தியா! TOP-10 NRI எங்க இருக்காங்க தெரியுமா?
இந்தியாவின் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 29 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரம் சீனாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 25% குறைந்துள்ளது. இதன் மூலம் ஆசியாவில் செல்வத்தை உருவாக்கும் மையமாக இந்தியாவின் வளர்ந்து வருகிறது என்பதை பார்க்க முடிகிறது.
ஹுருன் இந்தியாவின் நிறுவனர் மற்றும் தலைமை ஆராய்ச்சியாளரான அனஸ் ரஹ்மான் ஜுனைட் இதுகுறித்து பேசிய போது "ஆசியாவின் செல்வத்தை உருவாக்கும் இயந்திரமாக இந்தியா உருவாகி வருகிறது சீனா அதன் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் 25% சரிவைக் கண்டாலும், இந்தியா 29% அதிகரித்து, 334 கோடீஸ்வரர்கள் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது” என்று கூறினார்.
முன்னதாக மார்ச் 2024 இல், ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2024 இன் படி, மும்பை பெய்ஜிங்கை பின்னுக்கு தள்ளி முதன்முதலில் முதன்முதலில் ஆசியாவின் பில்லியனர் மையமாக மாறிய போதே தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருந்தது. அந்த நேரத்தில் மும்பை 92 கோடீஸ்வரர்கள் இருந்த நிலையில், அது உலகளவில் மூன்றாவது இடத்தை பிடித்தது. 119 கோடீஸ்வரர்களுடன் இந்த பட்டியலில் நியூயார்க் முதலிடத்திலும், 97 கோடீஸ்வரர்களுடன் லண்டன் 2-வது இடத்திலும் இருந்தது.. கடந்த ஆண்டில், மும்பையில் புதிதாக 26 கோடீஸ்வரர்கள் இணைந்தனர். மும்பையின் மொத்த பில்லியனர் சொத்து மதிப்பு 445 பில்லியன் டாலரா உள்ளது.
அம்பானி, அதானி, ரத்தன் டாடா இல்லை.. சொந்தமாக ரயிலை வைத்திருக்கும் ஒரே நபர் யார் தெரியுமா?
இதற்கு நேர்மாறாக, பெய்ஜிங் அதன் பில்லியனர் மக்கள்தொகையில் சரிவைச் சந்தித்துள்ளது, மார்ச் 2024க்குள் 28% வீழ்ச்சியைக் கொண்டுள்ளது. பெய்ஜிங்கில் உள்ள பில்லியனர்களின் மொத்தச் சொத்து இப்போது 265 பில்லியன்டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க சரிவு சீனாவை விட, இந்தியாவின் பொருளாதார சக்தி மற்றும் செல்வத்தை உருவாக்குவதற்கான மாற்றத்தை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக, ஆசியாவின் பில்லியனர் தலைநகராக மும்பையின் எழுச்சி உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.