
ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் வரி வசூலிப்பு மேலும் 4 ஆண்டுகளுக்கு அதாவது, 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிவரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் வசூலிப்பு வரும் 30ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால், கடந்த 2 நிதியாண்டுகளாக கொரோனா காலத்தில் ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறை, வாங்கிய கடனை செலுத்துதல் ஆகியவை இருப்பதால், இழப்பீடு செஸ் வசூலிப்பை 2026ம் ஆண்டுவரை நீட்டித்து மத்திய நிதிஅமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
FD மூலம் அதிக வருவாய் வேணுமா? இந்த 4 விஷயத்தை மறக்காம செய்யுங்க, குபேரன் கொட்டுவாரு..
கடந்த ஆண்டு செப்டம்பரில் லக்னோவில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் “ 2022 ஜூன் மாதத்தோடு மாநிலங்களுக்கான இழப்பீடு வழங்குவது முடிவுக்கு வந்துவிடும்” எனத் தெரிவித்திருந்தார்
ஆனால், தற்போது இழப்பீடு வரி வசூலிப்பு நீட்டிக்கப்பட்டிருப்பது. இதனால், விலை உயர்ந்த ஆடம்பரப் பொருட்கள், புகையிலை, கிளப்புகளுக்கு விதிக்கப்படும் இழப்பீடு வரி தொடர்ந்து 2026ம்ஆண்டுவரை வசூலிக்கப்படும்.
மாநிலங்களுக்கு இழப்பீடு நிதியாக மத்திய அரசு 2020-21 நிதியாண்டில் ரூ.1.10 லட்சம் கோடியும், 2021-22ம் ஆண்டில் ரூ.1.59 லட்சம் கோடியும் விடுவித்தது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களுக்காக வாங்கிய கடனுக்கு மத்திய அரசு தற்போது வட்டி செலுத்தி வருகிறது. 2021-22 நிதியாண்டில் ரூ14 ஆயிரம் கோடி, நடப்பு நிதியாண்டில் ரூ.14ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு முதல் அசல்கடன் தொகை திருப்பிச் செலுத்தும் காலம் தொடங்கும்.
அட்ராசக்கை! 2 மாசத்துல ரூ.500 கோடி வருவாய்: வியக்கவைத்த ஓலாவின் அறிக்கை
ஜிஎஸ்டி வரி கடந்த 2017ம் ஆண்டு கொண்டுவரப்பட்டபோது, மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்பீட்டுக்காக, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது, 2022, ஜூன் மாதத்தோடு இழப்பீடு வழங்குவது முடிகிறது.
ஆனால், , கொரோனா காரணமாக வரிவருவாய் குறைவு, ஜிஎஸ்டி இழப்பு கூடுதலாக இருப்பதால் இழப்பீடுதருவது அடுத்த 2 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இழப்பீடு வழங்குவது நீட்டிக்கப்படுமா என்பது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்தான் முடிவு எடுக்கப்படும்.
தமிழகத்திலிருந்து குவைத், கத்தார், சவுதிஅரேபியாவுக்கு அதிகரித்த விமானக் கட்டணம்: ஏன் தெரியுமா?
ஏஎம்ஆர்ஜி அசோசியேட்ஸ் நிறுவனத்தின் மூத்தஆலோசகர் ராஜத் மோகன் கூறுகையில் “ ஜிஎஸ்டி இழப்பீடு வரி வசூலிப்பு நீட்டித்திருப்பதால் புகையிலை, சிகரெட், ஹூக்கா, குளிர்பானங்கள், விலைஉயர்ந்த மோட்டார்சைக்கிள், விமானம்,உள்ளிட்ட சொகுசுப் பொருட்களுக்கு வரி அதிகரிக்கும். ஆனால் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி இழப்பீடு நீட்டிப்பு குறித்து வர இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் ” எனத் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.