ola used cars: ola dash: ஓலா நிறுவனம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய பழைய கார்களை வாங்கி விற்கும் ஓலா கார்ஸ் நிறுவனத்தையும், ஆன்லைன் டெலிவரியான குயிக்டேஷ் நிறுவனத்தையும் மூடஉள்ளது.
ஓலா நிறுவனம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய பழைய கார்களை வாங்கி விற்கும் ஓலா கார்ஸ் நிறுவனத்தையும், ஆன்லைன் டெலிவரியான குயிக்டேஷ் நிறுவனத்தையும் மூடஉள்ளது.
அட்ராசக்கை! 2 மாசத்துல ரூ.500 கோடி வருவாய்: வியக்கவைத்த ஓலாவின் அறிக்கை
8 மாதங்களுக்கு முன்புதான் ஓலா நிறுவனம் ஓலா கார்ஸைத் தொடங்கியது. 100 நகரங்களில் 300 மையங்களைத் திறக்க ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக 10ஆயிரம் ஊழியர்கள் பணிக்கு எடுக்கப்பட்டனர். இப்போது இந்த ஊழியர்கள் அனைவரும், ஓலா ஸ்கூட்டர்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு மாற்றப்பட உள்ளதாகத் தெரிகிறது.
இந்தியா வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற சந்தைதான் என்றாலும், லாபம் கொழிக்கும் தொழிலைப் பார்த்து செய்யாவிட்டால், கோடிக்கணக்கில் முதலீடு போட்டாலும் கல்லாகட்டாது.
ஆன்-லைன் டாக்சி சேவை மற்றும் பேட்டரி ஸ்கூட்டர்கள் வியாபாராத்தோடு வேறு தொழிலையும் நடத்த ஓலா நிறுவனம் எண்ணி. இதையடுத்து, பழைய கார்களை வாங்கி சர்வீஸ் செய்து விற்பனை செய்யும் ஓலா கார்ஸ் நிறுவனத்தையும், பொருட்களை டெலிவரி செய்யும் ஓலா டேஷ் நிறுவனத்தையும் தொடங்கியது. ஆனால், வர்த்தகத்தில் இழப்பு தலையைக்காட்டி கையைக் கடிக்கவே, இரு கடைகளையும் இழுத்து மூட ஓலா முடிவு செய்துள்ளது.
நிதிஆயோக் சிஇஓவாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்: ஸ்வச் பாரத் திட்ட வெற்றி நாயகர்
இந்த தகவலை ஓலா நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில் “ ஓலா நிறுவனம் தனது முதலீடுகளை மறுமதிப்பீடு செய்ய இருக்கிறது. தன்னுடைய வர்த்தக நிறுவனத்தையும், ஓலா கார்ஸ் நிறுவனத்தையும் மூட ஓலா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இனிமேல் ஓலா பேட்டரி ஸ்கூட்டர் விற்பனை, சர்வீஸ்களில் அதிகமான கவனம் செலுத்த இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்
பழைய கார்களை வாங்கி, விற்பனைசெய்வதற்காக ஓலா கார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்துக்கு அருண் ஸ்ரீதேஷ்முக் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.ஓல்எக்ஸ், ட்ரூம், கார்ஸ்24, ஸ்பின்னி ஆகிய நிறுவனங்களுக்குப் போட்டியா ஓலா கார்ஸ் தொடங்கப்பட்டது.
ஆனால், கடந்த மாதம் ஸ்ரீதேஷ்முக் நிறுவனத்திலிருந்து வெளியேற, 5 நகரங்களில் செயல்பட்டு வந்த ஓலா கார்ஸ் நிறுவனமும் மூடப்பட்டது. இந்தியாவில் பழைய கார்களுக்கான விற்பனை, வாங்குதல் சந்தை உச்சத்தில் வரும்போது, ஓலா நிறுவனம் தனது நிறுவனத்தை மூடியுள்ளது.
கவுதம் அதானி ரூ.60 ஆயிரம் கோடி நன்கொடை: கல்வி, மருத்துவ உதவிகளுக்கு வாரி வழங்குகிறார்
ஓலா அடிக்கடி நிறுவனத்தைத் தொடங்கி மூடுவதை வழக்கமாக வைத்துள்ளது. 2015ம் ஆண்டு ஓலா காபே நிறுவனம் தொடங்கப்பட்டு ஓர் ஆண்டில் மூடப்பட்டது. 2017ம் ஆண்டில் புட்ஃபாண்டா நிறுவனத்தை விலைக்கு வாங்கிய ஓலா நிறுவனம் அதை நடத்தி வந்தது, ஆனால், 2019ம் ஆண்டில் அந்த நிறுவனத்தை மூடிவிட்டது. ஓலா ஃபுட்ஸ் நிறுவனத்தைதொடங்கி, அதுவும் தோல்வி அடையவே அதையும் மூடியது குறிப்பிடத்தக்கது.