itc: ஷாக்ஆகாதிங்க! 220 ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.ஒரு கோடிக்கு மேல் சம்பளம்: எந்த நிறுவனம் தெரியுமா?

Published : Jun 25, 2022, 12:18 PM IST
itc: ஷாக்ஆகாதிங்க! 220 ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.ஒரு கோடிக்கு மேல் சம்பளம்: எந்த நிறுவனம் தெரியுமா?

சுருக்கம்

itc :ஐடிசி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 220 பேர் ஆண்டுக்கு ரூ.ஒரு கோடிக்கும் மேல் ஊதியம் வாங்குகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐடிசி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 220 பேர் ஆண்டுக்கு ரூ.ஒரு கோடிக்கும் மேல் ஊதியம் வாங்குகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆகாசத்தில் பறக்கப்போகிறது ஆகாஸா: ஜூலையில் வர்த்தக சேவை தொடக்கம்

2021-22 நிதியாண்டு முடிவு குறித்து ஐடிசி நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில்தான் இந்தத் தகவலை தெரிவித்துள்ளது. இந்த 220 ஊழியர்களின் ஊதியமும் 44சதவீதம் உயர்ந்துள்ளது. 

இந்த 220 ஊழியர்களும் மாதம் சராசரியாக ரூ.8.50 லட்சம் ஊதியம் பெறுகிறார்கள். ஆண்டுக்கு,ரூ.ஒரு கோடிக்கு மேல் கிடைக்கிறது. கடந்த 2020-21ம் நிதியாண்டில் ஐடிசி நிறுவனத்தில் 153 ஊழியர்கள் ஆண்டுக்கு ரூ.ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய நிலையில்,தற்போது 220ஆக அதிகரித்துள்ளது.

ஐடிசியின் ஆண்டு அறிக்கையில் “ எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 220 பேர் ஆண்டுமுழுவதும் பணியாற்றினார்கள். அவர்களுக்கு ரூ.102 லட்சம் ஆண்டு ஊதியமாகத் தரப்படுகிறது. மாதத்துக்கு ரூ.8.50 லட்சம் ஊதியம் தரப்படுகிறது. 

itr 2022-23: 2022-23ம் ஆண்டுக்கான IT ரிட்டனை நிரப்புவது எப்படி?: வருமானவரி துறை புதிய தகவல்

ஐடிசி நிறுவனத்தின் தலைவர், மேலாண் இயக்குநர் சஞ்சீவ் பூரி்க்கு நடப்பு ஆண்டில் ஊதியம் 5.35 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.12.59 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் போனஸாக ரூ.7.52 கோடிவழங்கப்பட உள்ளது. மேலாண் இயக்குநர் பூரியின் ஊதியம் என்பது ஐடிசி நிறுவனத்தில் 224 ஊழியர்கள் பெறும் ஊதியத்தை இவர் ஒருவரே பெறுகிறார் ” எனத் தெரிவித்துள்ளது.

2021-22ம்ஆண்டில் பூரியின் ஒட்டுமொத்த ஊதியம் ரூ.11.95 கோடியாக இருந்தது. ஐடிசிநிர்வாக இயக்குநர் பி.சுந்த்துக்கு நடப்பு ஆண்டில் ஆண்டுக்கு ரூ.5.76 கோடியும், டான்டனுக்கு ரூ.5.60 கோடியும் வழங்கப்பட்டது. 

2022, மார்ச் 31 வரை, ஐடிசி நிறுவனத்தில் 23,829 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இது கடந்த நிதியாண்டைவிட 8.4 சதவீதம் குறைவு. 21ஆயிரத்து 568 ஆண்கள், 2,261 பெண்கள் ஐடிசி நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். இது தவிர 25,513 தற்காலிக ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். 

2021 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி ஐடிசி நிறுவனத்தில் 26,017 பேர் பணியாற்றினர். 
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

அனில் அம்பானிக்கு அதிர்ச்சி.! அமலாக்கத்துறை எடுத்த அஸ்திரம்.. இடியாப்ப சிக்கலில் ரிலையன்ஸ் பவர்
Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?