Windfall Tax: இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய், டீசலுக்கு வரி குறைப்பு

By Pothy Raj  |  First Published Dec 16, 2022, 9:45 AM IST

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உள்நாட்டில் எடுக்கப்பட்ட கச்சா எண்ணெய் மற்றும் டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றுக்கான வரியை மத்திய அ ரசு குறைத்துள்ளது. இன்று முதல் இது நடைமுறைக்கு வருகிறது.


இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உள்நாட்டில் எடுக்கப்பட்ட கச்சா எண்ணெய் மற்றும் டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றுக்கான வரியை மத்திய அ ரசு குறைத்துள்ளது. இன்று முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

இது குறித்து மத்திய நிதிஅமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

Tap to resize

Latest Videos

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்தியாவில்ருந்து ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய் , டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றுக்கானவரி குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, கச்சா எண்ணெய் டன் ஒன்றுக்கு ரூ.4,900 என வரி விதிக்கப்பட்ட நிலையில் அது டன்னுக்கு ரூ.1,700 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில்தான் பெட்ரோல் விலை மிகக்குறைவு! ஹர்தீப் பூரி பெருமிதம்

விமான எரிபொருளுக்கான வரி முன்பு லிட்டருக்கு ரூ.5 விதிக்கப்பட்ட நிலையில் அது லிட்டருக்கு ரூ.1.50ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோலுக்கான சிறப்பு உற்பத்தி வரிவிதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.

டீசல் ஏற்றுமதிக்கான வரி முன்பு லிட்டருக்கு ரூ.8 ஆக இருந்தநிலையில் தற்போது ரூ.5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது

ஐஆர்சிடிசி பங்குகளை விற்கிறது மத்திய அரசு: விலை தெரியுமா? 5 சதவீதம் பங்கு திடீர் வீழ்ச்சி

கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து சர்வதேச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதையடுத்து, இந்த அதிரடி சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

கச்சா எண்ணெயின் மீதான விண்ட்ஃபால் வரி என்பது உற்பத்தியாளர்கள் ஒரு வரம்பிற்கு மேல் பெறுகின்ற விலையை எடுத்துக்கொள்வதன் மூலம் கணக்கிடப்படுகிறது, மேலும் எரிபொருள் ஏற்றுமதிக்கான வரியானது வெளிநாட்டு ஏற்றுமதியில் சுத்திகரிப்பாளர்கள் பெறும் லாபத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது

இந்தியப் பொருளாதாரத்துக்கு அடுத்த ஆண்டு கடினமானதாக இருக்கும்: ரகுராம் ராஜன் கணிப்பு

ரஷ்யா உக்ரைன் போரின்போது கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்தபோது, தனியார் எண்ணெய் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியதைத் தொடர்ந்து ஜூலை 1ம் தேதி விண்ட்பால் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் பெட்ரோல் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ரூ.6, டீசல் மற்றும் விமான எரிபொருளுக்கு லிட்டருக்கு ரூ. 13 நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
 

click me!