Petrol Diesel Price: இந்தியாவில்தான் பெட்ரோல் விலை மிகக்குறைவு! ஹர்தீப் பூரி பெருமிதம்

By Pothy Raj  |  First Published Dec 16, 2022, 9:17 AM IST

உலகில் பெட்ரோல் விலை குறைவாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பெட்ரோலுக்கான வாட் வரியை மேற்குவங்கம், தமிழகம், ஆந்திரபிரதேசம்,தெலங்கானா , கேரளா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் குறைக்கவில்லை. இதனால்தான் இந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கிறது என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி குற்றம்சாட்டியுள்ளார்


உலகில் பெட்ரோல் விலை குறைவாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பெட்ரோலுக்கான வாட் வரியை மேற்குவங்கம், தமிழகம், ஆந்திரபிரதேசம்,தெலங்கானா , கேரளா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் குறைக்கவில்லை. இதனால்தான் இந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கிறது என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி குற்றம்சாட்டியுள்ளார்

பெட்ரோல், டீசல் வரியை குறைப்பது குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

Tap to resize

Latest Videos

நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அரசியல் சாசன திருத்த மசோதா… மக்களவையில் நிறைவேற்றம்!!

மேற்குவங்கம், தமிழகம், ஆந்திரபிரதேசம்,தெலங்கானா , கேரளா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் பெட்ரோல, டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களுக்கான வாட் வரியைக் குறைக்கவில்லை. சில மாநிலங்களில் 17ரூபாய் அளவுக்கு வாட் வரி வசூலிக்கின்றந. ஆனால், பாஜக ஆளாத மாநிலங்களில் ரூ.32 வரை வாட் வரி வசூலிக்கப்படுகிறது. ஆதலால் வேறுபாடு இருக்கிறது. 

பாஜக ஆளாத மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100 வரை விற்கிறது. ஆனால்,சில மாநிலங்களில் அதைவிட ரூ.8 முதல் ரூ.10 குறைவாக இருக்கிறது. இப்போதுள்ள சூழலில் இந்தியாவில் பெட்ரோல் விலைதான் மிகவும் குறைவானது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ரூ.27,276 கோடி இழப்பைச் சந்தித்துள்ளன. எம்.பி.க்கள் தங்களின் மாநில அரசிடம் எடுத்துக்கூறி வரியைக் குறைக்க முயல வேண்டும். 

இன்னும் நிரப்பலையா! ஐஏஎஸ், ஐபிஎஸ், சிபிஐ அதிகாரிகள் பணியில் காலியிடங்கள் நிலவரம் தெரியுமா?

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி மூலமே தீர்க்கிறது. ஆதலால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை என்பது, சர்வதேச சந்தை அடிப்படையில்தான் இருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை என்பது, கச்சா எண்ணெய் கொள்முதல், பரிமாற்ற வீதம், போக்குவரத்துச்செலவு, உள்நாட்டில் போக்குவரத்துச் செலவு, சுத்திகரிப்புச் செலவு, டீசல் கமிஷன், மத்தியஅரசு வரிகள், மாநில வரிகள்  உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது.

இ்ந்தியாவின் சந்தை மதிப்பின்படி, கச்சா எண்ணெய் விலை 102 சதவீதம் 2020 நவம்பர் மற்றும் 2022 நவம்பர் மாதங்களுக்கு இடையே உயர்ந்துள்ளது. ஆனால் சில்லறையில் பெட்ரோலுக்கு 18.95%, டீசலுக்கு 26.50% மட்டுமே உயர்த்தியுள்ளோம்

36-வது ரஃபேல் போர் விமானம் பிரான்ஸிலிருந்து இந்தியா வந்தடைந்தது

2022, ஏப்ரல் 6ம் தேதிக்குப்பின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை. 2021-22 நிதியாண்டில் பிபிசிஎல், ஹெச்பிசிஎல், ஐஓசிஎல் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் ரூ.28,360 கோடி லாபமீட்டியநிலையில், 2022-23ம் ஆண்டில், ரூ.27,276 கோடி இழப்பைச் சந்தித்துள்ளன.

இவ்வாறு ஹர்திப் பூரி தெரிவித்தார்
 

click me!