Share Market Today: பள்ளத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 62ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிவு: ஐடி பங்கிற்கு அடி

By Pothy RajFirst Published Dec 15, 2022, 3:56 PM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை இன்று மோசமான சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 878 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை இன்று மோசமான சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 878 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது.

அமெரிக்க பெடரல் வங்கி, பணவீக்கத்தைக் குறைக்கும் நோக்கில் வட்டியில் 50 புள்ளிகளை உயர்த்தியது. அதேசமயம், பணவீக்கத்தை 2 சதவீதம் வரை குறைக்கும் வரை வட்டிவீதம் உயர்த்தப்படும் என்று சூசகமாகத் தெரிவித்தது. 

ஐஆர்சிடிசி பங்குகளை விற்கிறது மத்திய அரசு: விலை தெரியுமா? 5 சதவீதம் பங்கு திடீர் வீழ்ச்சி

இதனால் அடுத்துவரும் பெடரல் ரிசர்வ் கூட்டத்திலும் வட்டிவீத உயர்வு இருக்கும் என்பது தெரிந்தது. அமெரிக்காவில் தற்போது வட்டிவீதம் கடந்த 2007ம் ஆண்டுக்குப்பின் 4.50 சதவீதமாக உயர்ந்துவிட்டது. 

இதுதவிர இங்கிலாந்து தலைமை வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் வங்கியும் இன்று வட்டிவீதம் உயர்வு குறித்து முடிவுகளை எடுக்க உள்ளன. இந்தக் காரணங்களால், முதலீட்டாளர்கள் பெரும் அச்சமடைந்து, முதலீடு செய்வதைக் குறைத்து பங்குகளை விற்று லாபநோக்கத்தில் செயல்பட்டதால் காலையிலிருந்தே பங்குச்சந்தையில் சரிவு தொடர்ந்தது.

இந்தியப் பொருளாதாரத்துக்கு அடுத்த ஆண்டு கடினமானதாக இருக்கும்: ரகுராம் ராஜன் கணிப்பு

அது மட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்பப் பங்குகள் மோசமாகச் செயல்பட்டதால், பங்குச்சந்தையில் பெரும் சரிவுக்கு காரணமாக அமைந்தது. ஐ.டி துறை பங்குகள் 2 சதவீதம் சரிந்தன, பொதுத்துறை பங்குகள் 1.80 சதவீதம் சரிந்தன

மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 878 புள்ளிகள் குறைந்து, 61,799 புள்ளிகளில் நிலைபெற்று 62 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் வந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 245  புள்ளிகள் சரிந்து, 18,414 புள்ளிகளில் நிலை பெற்றது.

‘பயப்பட தேவையில்லை.. எல்லாம் சரியா இருக்கு.. நாங்க இருக்கோம்’ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி !

நிப்டியில் உள்ள அனைத்து துறைகளும் இன்று சரிவில் முடிந்தன. எந்ததுறைப் பங்குகளும் லாபம ஈட்டவில்லை. 

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களில் மகிந்திரா அன்ட் மகிந்திரா, சன்பார்மா, என்டிபிசி ஆகிய 3 நிறுவனங்களைத் தவிர மற்ற 27 நிறுவனங்களின் பங்குகளும்சரிவில் முடிந்தன.
நிப்டியில் டெக் மகிந்திரா, டைட்டன் நிறுவனம், இன்போசிஸ், ஹெச்டிஎப்சி, எய்ச்சர் மோட்டார்ஸ் ஆகியவை அதிகமான இழப்பைச் சந்தித்தன. பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டார்ஸ், எஸ்பிஐ காப்பீடு, என்டிபிசி, சன்பார்மா பங்குகள் லாபமடைந்தன


 

click me!